வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் பகுத்தறிவுப் பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 2, 2023

வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் பகுத்தறிவுப் பரப்புரை

கருநாடக மாநிலத்தின் சிந்தாமணி என்ற ஊரில் லோடு இறக்கி விட்டு, லோடு உரிமையாளரிடம் வாடகை வாங்குவதற்காக லோடுக்கு உண்டான பில்லை எனது இடது கையால் கொடுத்த போது உங்கள் வலது கையால் கொடுங்கள் என்று சொன்னபோது ,நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் எனது வலது கையால் கொடுத்தேன்.

அவர் வாடகைப் பணத்தை எண்ணிக் கொடுக்கும் போது "அய்யா மன்னிக்கவும் வாடகைப் பணத்தை உங்கள் வலது கையால் மட்டுமே எண்ணி எனக்கு தரவும்" என்று சொன்னவுடன் அவர் ஓ... நீங்கள் பெரியார் கட்சியா? என்று கேட்டார். நான் சிரித்துக் கொண்டே ஆம் என்று சொல்லிவிட்டு,

நான் எனது  இரண்டு கைகளையும் கொண்டு ஸ்டேரிங் பிடித்து, ஒரு காலை கிளட்ச் உபயோகத் திற்கும்,  ஒரு காலை எக்ஸிலேட்டர் உபயோகத்திற்கும் பயன்படுத்தினால் தான் லாரியை ஓட்ட முடியும் என்று சொல்லி விட்டு, பூனை இரவில் போகும் போது லைட்டை ஆஃப் செய்வது எதற்காகத் தெரியுமா? பூனைக்கு இருட்டில்தான் கண் நன்றாக தெரியும் - நாம் லைட்டை ஆஃப் செய்தால் கிடைக்கும் நொடி நேர இருட்டில் லாரி டயரில் சிக்கி இறப்பு ஏற்படாமல் அது பாதுகாப்பாக வேறு இடத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும். என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சிரித்தபடி கைகூப்பி வணக்கம் சொல்லிய அவர் வாடகைப் பணத்தை இடது கையால் கொடுத்து விட்டு  செல்லும் போது சார் இன்னும் ஒரே ஒரு நிமிடம் என்று வேண்டுகோள் விடுத்து ஒரு மாதத்திற்கு லாரிக்கு எலுமிச்சைப் பழம், ரோட்டோரத்தில் உள்ள முனியப்பன் சாமிக்கு உண்டியலில் பணம், கற்பூரம், ஊதுபத்தி, பூமாலை ஆகியவற்றிற்கு ஆகும் செலவை மீதப் படுத்தி தினமும் இளநீர், பழவகைகள், வாங்கி சாப்பிட்டு 63 வயதிலும் சற்றும் சளைக்காமல், - 90 வயதிலும் சளைக்காமல்  சுற்றுப் பயணம் செய்யும் எங்கள் தலைவர் ஆசிரியர் அய்யா   அவர்களைப் போலவே - என்னால் இதய அறுவைச் சிகிச்சை செய்து 12 ஆண்டு முடிந்த பின்னரும்   லாரி ஓட்டமுடிகிறது என்று சொல்லி அவரிடம் விடை பெற்று நானும் அவருக்கு கைகூப்பி வணக்கம் சொல்லி விட்டு மீதியை அடுத்த லோடு ஏற்றிக் கொண்டு வரும் போது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி  விட்டு அடுத்த லோடு ஏற்றுவதற்கு வேறு இடத்திற்கு எனது லாரியில் பயணத்தை தொடர்ந்தேன்.

  - ஓமலூர் பெ.சவுந்தரராசன்

பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment