வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்?

புதுடில்லி,  ஏப். 1 ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  கருநாடக மாநில சட்டமன்ற தேர் தலுக்கு மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்  29_3_2023 அன்று அறிவித்தார்.

அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக் களவை தொகுதிக்கும், ஒடிசா வின் ஜார்சு குடா, உத்தரப்பிரதேசத்தின் சான்பே, சுவர் மற்றும் மேகாலயாவின் சோஹியாங் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக் கும் மே 10-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம்  அறிவித்துள் ளது. ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பால் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் கூறிய தாவது:- பிப்ரவரி மாதம் வரையில் காலியான தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு மேல்முறையீடு செய்வதற்கு சூரத் நீதிமன்றம் 30 நாள் அவகாசம் வழங்கி உள்ளது. 

எனவே அங்கு தேர்தல் நடத்த அவசரம் இல்லை. நாங்கள் காத் திருப்போம்.விசா ரணை நீதிமன்றம் வழங்கி உள்ள குறிப்பிட்ட அவகாசம் தீர்ந்து விடும் முன் இடைத்தேர்தலுக்கு அவசரம் இல்லை. எனவே வய நாடு தொகுதி தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அங்கு 6 மாதங் களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

எஞ்சிய பதவிக்காலம் ஓராண் டுக்குள் இருந்தால் இடைத் தேர்தல் நடத்தப்படுவதில்லை. வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் எஞ்சிய காலம் ஓராண்டுக்கு மேல் உள்ளது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment