யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர ஜாதிய பாகுபாடு பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர ஜாதிய பாகுபாடு பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இன்றும் ஜாதிய பாகுபாடுகள்  நிகழ்ந்துவருவதும், ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மக்கள் ஜாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளையே செய்து வருகின்றனர் எனவும் பிபிசி சிங்கள சேவையின் களச் செய்தி கூறுகிறது.

இலங்கையின் வட மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் ஹிந்து ஆலயங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவானது, 1956ஆம் ஆண்டு நீக்கப்பட்ட போதிலும், மத சுதந்திரம் இன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

அத்துடன், குடியிருக்கவோ, விவசாயம் செய் யவோ விருப்பம்போல் நிலத்தை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும் அம்மக்களுக்கு வழங்கப்பட வில்லை.

2022ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் மூலம், விவசாயத்திற்காக நீரைப் பெறுவதில் கூட பாகுபாடு காட்டப்படுவது தெரியவந்தது.

அய்க்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியொருவர், வட பகுதிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது பெற்றுக் கொண்ட தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஒடுக்கப்பட்ட ஜாதியிலிருந்து வரும் குழந் தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு அரசு அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆதிக்க ஜாதி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை காட்டிலும் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் மிக மோச மாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் வடக்கு மாகா ணத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஜாதி குழந்தைகள் கல்விக்கு தேவையான சீருடை போன்ற அடிப்படை வசதிகளற்று உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒடுக் கப்பட்ட ஜாதியை சேர்ந்த குழந்தைகளை ஆசிரி யர்களும் ஒதுக்குகின்றனர். சில பள்ளிகளில் ஒடுக் கப்பட்ட ஜாதியை சேர்ந்த குழந்தைகளுக்கு அரசு அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இருந்த தையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதேபோல ஆதிக்க ஜாதி பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த குழந் தைகள் படிக்கும் பள்ளிகளின் கல்வித் தரம் சிறப் பானதாக இல்லை.

மற்றொரு பிரச்சினை ஆதிக்க ஜாதியினரால் ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்கும் வன்முறைகள். பல சமயங்களில் இந்த குற்றங்களுக்கான நீதி மிக தாமதமாகவே வழங்கப்படுகின்றது.

சமூக பாகுபாட்டு சட்டமூலமொன்று 1957ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போதிலும், அந்த சட்டம் திறன்பட அமலாக்கப்படுவதில்லை என யாழ்ப்பாணம் சிவில் சமூக கேந்திர நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவிக்கின்றார்.

'சட்டம் இருந்தும் பலனில்லை'

''1957ஆம் ஆண்டு சமூக பாகுபாட்டு சட்டம் என்ற ஜாதிக்கு எதிரான சட்டமூலமொன்று காணப் படுகின்றது. அவ்வாறான சட்டம் 60 ஆண்டுகளாக காணப்படுகின்ற போதிலும், அந்த சட்டம் வடக்கு மாகாணத்தில் அமலாகவில்லை. 2021ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட ஜாதிப் பிரச்சினை தொடர்பில் காவல்துறை அறிக்கையில் தெளிவாக ஜாதிப் பிரச்சினை என கூறப்பட்டுள்ளது. எனினும், அந்த பிரச்சினையில்கூட அந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை," என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கோவில்களுக்குள் தாம் தற்போது அனுமதிக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட ஜாதி என்ற அடிப்படையில் ஆதிக்கஜாதியை சேர்ந்த வர்கள் பாகுபாடு காண்பித்து வருவதாக யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் வசந்தா தேவி தெரிவிக்கின்றார்.

''சிவன் கோவில் இருக்கின்றது. அங்கு போவதற்கு முடியும். ஆனால், எங்களோட சமூகத்துடன் அவர்கள் ஒன்றாக நின்றதில்லை. சமமான உரிமைகள் வழங்கப்படுவதில்லை. அன்னதானம் என்றால், எங்களோட சமூகம் மரக்கறி வெட்டிக் கொடுக்கவோ அல்லது வேலைகள் செய்யவோ கூடாது. சாப் பாட்டிற்கு மாத்திரம் அமர வைத்து சாப்பாடு கொடுப்பார்களே தவிர, மற்றப்படி எதுவும் நடக்காது. நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கோவி லுக்குள் விடுகின்றார்கள். எல்லாம் சமமாக வந்துட்டது. பிரச்சினை இல்லை என்று. ஆனால் பிரச்சினை நிறைய இருக்கின்றது. இனி தான் பிரச்சினைகூட. - எங்கட சமூகத்தை மதித்து, இந்த வேலையை செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். சாமியை தூக்குவதற்கு கூட எங்கட மக்களுக்கு உரிமை இல்லை." என கதிர்காமநாதன் வசந்தா தேவி குறிப்பிடுகின்றார்.

ஜாதிய பாகுபாடால் 

மதம் மாறும் மக்கள்

ஜாதி அடிப்படையில் மக்களை கோவில்களுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கின்றமையினால், அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விபுலானந்தா சுவாமி கூறுகின்றார்.

''பல தசாப்த காலமாக எமது மக்களை கீழ்தரமாக நடத்தி, அவர்களை எமது சமய நிகழ்வுகளுக்கு கூட அனுமதிப்பதில்லை. எமது மக்கள் சிறிய சிறிய ஆல யங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணத்தினால் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறு கின்றார்கள்" என்கின்றார் விபுலானந்தா சுவாமி.

ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களே கள்ளு இறக்குதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருவ தாக அந்த தொழிலில் ஈடுபடும் காங்கேசன்துறையைச் சேர்ந்த சுந்தரம் மெத்தானந்தம் குறிப்பிடுகின்றார்.

தங்களை ஒதுக்கி வைத்து, அவமானப்படுத்திய சந்தர்ப்பங்களும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

தங்களை அழைத்து - உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களை கணக்கெடுக்க மாட்டார்கள் - எனவும் சுந்தரம் மெத்தானந்தம் தெரிவிக்கின்றார்.

தமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும், அவர்களுக்கான மரியாதை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என திருநகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராசநாயகம் தெரிவிக்கின்றார். 

''இன்றைக்கும் திருநகர் மக்களை குறைத்து மதித்து கதைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் இல்லாவிட்டால், மற்றவர்கள் வாழ முடியாது. அங்கு சூழலை துப்புரவு செய்வது இந்த ஊர் மக்கள் தான். அதை கொச்சைப்படுத்துவதற்கு யாராலும் முடியாது.  அது கூடாது. எந்த இடத்திற்கு சென்றாலும், எங்களுக்கான மரியாதையை கட்டாயம் தர வேண்டும்," என அந்தோணி ராசநாயகம் குறிப் பிடுகின்றார். 

மறுப்பு தெரிவிக்கும் 

அரசு அதிகாரிகள்

ஒடுக்கப்பட்ட ஜாதி என கூறப்படும் தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசியல் வாதிகளும், அரச நிர்வாகிகளும் மறுக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் அவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அவ்வாறான பிரச்சினை கிடையாது என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி வினவியது.

தாம் போராட்டங்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் அவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த பிரச்சினை கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் ஷெலி உபுல் குமாரவிடம் பதிலளித்தார்.

ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில்லை என முன்வைக்கப் படும் குற்றச்சாட்டையும் அமைச்சர் நிராகரித்தார்.

ஜாதிய பாகுபாடு என்பது புதியதொரு பிரச் சினையாக உள்ளது எனவும் அதை கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர், இந்த' புதிய பிரச்சினை' குறித்து மாவட்ட ஒருங் கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜாதிய பாகுபாடால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அதை வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர்.

ஜாதிய பிரச்சினை தொடர்பில் கருத்து வெளி யிடும் பட்சத்தில் - தாங்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் என ஏனையோர் அடையாளம் கண்டுக் கொள்வார்கள் - என்ற அச்சத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்க முன்வருவதில்லை.

வடக்கில் ஜாதியவாதம் மற்றும் வறுமை ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் உள்ளது.

விடுதலைப் புலிகளில் இருந்த உறுப்பினர்களில் பலர், ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதில் எந்த இரகசியமுமில்லை.

அரசு அதிகாரிகள் நிராகரித்த போதிலும், யாழ்ப் பாணத்தில் ஜாதி பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்த மக்கள் எப்போது அந்த பிரச்சினையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்? என்பது பெரும் கேள்வி யாகவே உள்ளது.

நன்றி: பிபிசி தமிழ் இணையம், 19.4.2023


No comments:

Post a Comment