மன்னர்கள் அந்தணர்களுக்கு ஏன் அடிமையானார்கள்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

மன்னர்கள் அந்தணர்களுக்கு ஏன் அடிமையானார்கள்?

இருக்குவேதம், ஐதரேயப் பிராஹ்மணம் 7-ஆவது அத்தியாயம் 7-ஆவது பஞ்சகத்தில் அரசனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்யுஞ் சடங்குகளில், அவ்வரசனை “நான் பிராஹ்மணரிடத்தும், க்ஷத்திரியரிடத்தும், மூன்றுகாலத்தும் ஸ்திரமாய் நிற்கிறேன்” என்று சொல்லுவித்துச் சத்தியப்பிரமாணம் வாங்கப்பட்டிருத்தலேயாம். அன்றியும் ஆரியர் இந்தியாவை ஜெயித்தபோது தங்களுக்குள் சாதிப் பிரிவுகள் செய்து கொண்டார்கள். அப்போது பிராமணன் முதலானவனென்றும், க்ஷத்திரிய வைசிய சூத்திரர்கள் அவனுள் அடங்கி நடக்க வேண்டுமென்றும், மநு முதலிய சட்டங்களை ஏற்படுத்தி அவைகளின்படி க்ஷத்திரியனாக நியமிக்கப்படுவோன் தங்களுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்றும், பிரமாணம் அல்லது உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

அதனால் அந்தணர் சொற்படி அரசன் நடக்கவேண்டு மென்பது ஆதியில் ஏற்பட்டது.

(வருண சிந்தாமணி நூல், ஆசிரியர்: கனகசபைப் பிள்ளையவர்கள் - பதிப்பு 1901) 

தகவல்: தினகரன் செல்லையா


No comments:

Post a Comment