பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிவு விவகாரம் - தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிவு விவகாரம் - தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது

அய்தராபாத் ஏப். 7 தெலங்கானாவில் 10-ஆம் வகுப்புபொதுத்தேர்வு வினாத் தாள் கசிந்தவிவகாரத்தில் மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3..4.2023 அன்று தொடங்கியது. இதில் முதல் நாளில் தெலுங்கு வினாத் தாளும் இரண்டாம் நாளில்இந்தி வினாத்தாளும் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் வாட்ஸ்-அப்பில் கசிந்தன. தெலங் கானாவில் ஏற்கெனவே மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் கே.சந்திரசேகரராவ் தலை மையிலான பிஆர்எஸ் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு, பிஆர்எஸ் அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கு முழுப் பொறுப்பேற்று கல்வி அமைச் சர் சபீதா இந்திரா ரெட்டி பதவி விலக வேண்டும் என ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கரீம் நகரில் உள்ள மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் வீட்டை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் 4.4.2023அன்று நள்ளிரவில் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவரை   கைது செய்து  ஒரு அரசு மருத்துவமனையில் அவருக்கு   மருத்து வப் பரிசோதனைகள் செய்தனர். கைது செய்யப்பட்ட 16 மணி நேரத்திற்கு பிறகு  அவரை ஹனுமகொண்டா நீதிமன்றத்தில் வாரங்கல் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். பண்டி சஞ்சய் குமாரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

“இந்த வழக்கில் பண்டி சஞ்சய் குமார் முதல் குற்றவாளியாக சேர்க் கப்பட்டுள்ளார். இவர் மாணவர்களை தூண்டும் வகையில் பேசி வருகிறார். தேர்வு நடக்கும்போது இவருக்கும் வாட்ஸ்-அப் மூலமாக வினாத்தாள் நகல் வந்துள்ளது. இதனை இவருக்கு அனுப்பிய 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்" என்றார்.


No comments:

Post a Comment