குடுமி "குக்கீஸ்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

குடுமி "குக்கீஸ்!"

கருநாடகா மாநிலத்தில், ‘பிரா மின்ஸ் குக்கீஸ்’ (பிராமணர்களுக் கான நொறுக்குத் தீனிகள்) என்ற பெயரில், நொறுக்குத் தீனி  தயாரிக்கப்பட்டதும், அது விளம்பரப்படுத்தப்பட்டதும் தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. தனியொரு ஜாதிக்கென, இவ்வாறு நொறுக்குத் தீனி தயாரிக்கப்பட்டது, மீண்டும் ஜாதியத்தை வலுப்படுத்தும் முயற்சி என்றும், இது மிகவும் கேவலமான செயல் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பெங்களூருவில், ‘ப்ரெடீஸ் பேக்கிங் ஸ்டூடியோ’ (திக்ஷீமீபீபீவீமீ’s ஙிணீளீவீஸீரீ ஷிtuபீவீஷீ) எனும் நிறுவனம் பிரபலமான பேக்கரி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் குழந்தைகளுக்கென்றே பிஸ்கெட்டுகளை  தயாரித்து வருகிறது.  இந்நிலையில்தான், இந்த நிறுவனம் தற்போது ‘பிராமின்ஸ் குக்கீஸ்’ எனும் தனித்துவ பிஸ்கெட்டுகளை தயாரித்துள்ளது. அந்த பிஸ்கெட்டுகளில் மொட்டை யடிக்கப்பட்ட தலை, பூணூல், குடுமி,  காவி உடை என பார்ப் பனர்களுக்கான அடை யாளங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. இந்த பிஸ்கெட்டை ப்ரெடீஸ் பேக்கிங் ஸ்டூடியோ நிறுவனம், சமூக வலைதளங்களில் வெளியிட்டு, “ஒருவருடைய பாரம்பரியங்களை பிஸ்கெட்டாக மாற்றுவது என்பது - அவர்களுக்கு பிடித்த மானவைகளில் ஒன்றாகும். அந்த வகையில், இணையவாசிகள் தங்களின் வினோதமான குக்கீஸ் திட்டங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்” என கேட்டுக் கொண்டது.  

அதாவது, தற்போது பூணூல், குடுமி, காவி உடை யுடன் ‘பிராமின் குக்கீ’ஸைத் தயாரித்துள்ளோம். தேவைப் பட்டால் அவரவரின் ஜாதி, பாரம்பரியம், எண்ணங்களை தெரியப்படுத்தினால், அந்த அடையாளங்களையும் பிஸ்கெட்டாக மாற்றித்தர தயாராக இருக்கிறோம் என்பதே அது.  இதுதான் கருநாடகம் மட்டுமன்றி, நாடு முழுவதும் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. "உண்ணும் உணவில் கூடவா ஜாதி வெறியைப் புகுத்துவீர்கள்" என்று  ‘ப்ரெடீஸ் பேக்கிங் ஸ்டூடியோ’ நிறு வனத்திற்கு பலரும் கண்டனங் களைத் தெரிவித்து வருகின்றனர். “ஜாதிய அமைப்பைப் பாதுகாப்பதற்கு, ஜாதிய மேலாதிக்கக் கூட்டம் புதிய புதிய வழிகளைத் தேடுகிறது. அதில் இந்த குக்கீஸும் ஒன்று” என சமூகவலைதளங்களில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

பெங்களூருவில் பிராமண உணவகம் (ஙிக்ஷீணீலீனீவீஸீ ணிணீtமீக்ஷீவீமீs), பிராமின்ஸ் தட்டு இட்லி, பிராமின்ஸ் எக்ஸ்பிரஸ், அம்மா  பிராமின்ஸ் கபே என்ற பெயர்களில்  ஏற்கெ னவே உணவகங்கள் செயல்பட்டு வருவதைக் குறிப்பிட்டு,  ‘பிராமண உணவு’ என சொல்வ தற்கு என்ன இருக் கிறது? பிராமண உணவு என தனித்துவப்படுத்துவது ஏன்? இது ஜாதிவெறி அன்றி வேறில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பிஸ்கெட்டுகளை தனிநபர்  ஒருவர் தனது வீட்டில் நடந்த பூணூல் அணியும் விழாவுக்காக ஆர்டர் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. எனினும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது ‘பிராமின் குக்கீஸ்’ ஒளிப்படங்களை, ப்ரெடீஸ் பேக்கிங் ஸ்டூடியோ நிறுவனம் நீக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 'பிராமணாள் ஓட்டல்' கிளப்புகள் என்றிருந்த ஒரு காலம் உண்டு. அந்தப் பெயர்ப் பலகையை அழிக்கும் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றது திராவிடர் கழகம்.

என்ன செய்வது! இது போன்ற இயக்கம் வேறு மாநி லங்களில் இல்லையே!

-  மயிலாடன்

 

No comments:

Post a Comment