திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கும் புரிதலற்றவர்களுக்கு.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கும் புரிதலற்றவர்களுக்கு..

கடலூரில்  31.03.2023 அன்று மாலை திராவிடர் கழக தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  சமூகநீதி பரப்புரை பயண நிறைவு நிகழ்ச்சி (57) தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோருடன் நடந்தது.

அதில் சிறப்பு என்னவென்றால்.. அந்த நிகழ்ச்சி நடந்த இடம்.. பல நூற்றாண்டுகளாகப் பேர் பெற்ற பாடலீஸ்வரர் கோயிலின் முன்பு.. அதுவும் அந்த  வீதி பெரும்பகுதி மார்வாடிகளும்.. மார்வாடிகளின் கோவிலும் உள்ள இடம் .. தவிர ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்ட ஊர்வல துவக்க கேந்திரம்.. அந்த வீதியில்தான் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகள் நடக்கும்..

அந்த வீதியில்.. வீதியை நிறைத்து மேடை போட்டு .. கடவுளா?.. கல்லா?.. என்கிற பாடலை பாடி .. வைக்கம் போராட்ட காட்சிப் பதிவைப் போட்டு.. டி.எம்.கிருஷ்ணா என்கிற பிரபல பார்ப்பன கருநாடக பாடகர்.. பெரியாரை சிறப்பித்து பாடிய .. 'சிந்திக்க சொன்னவர் பெரியார்' என்கிற பெரியார் பாடலை ஒலிபரப்பி .. ஆயிரக்கணக்கான மக்களின்  எழுச்சிக்கு இடையே மேற்படி கருப்பு சட்டை நிகழ்ச்சி ஒரு சிறு கலவரமோ எதிர்ப்போ இன்றி மிகச் சிறப்பாக அனைவரும் உரை நிகழ்த்திட நடைபெற்றது.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால்.. திராவிடர் கழக மேடையில் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்க பின் புறம் பாடலீஸ்வரர் கோவில் நிகழ்ச்சிகள் எந்தச் சிறு தடங்கலுமின்றி.. நடந்து கொண்டே இருந்ததும்.. அதை விட ஆச்சரியம்.. நமது நிகழ்ச்சி மேடையின் முன்புறம் சாமி ஊர்வலம் ஒன்று எந்த சுணக்கமும் இன்றி நமது தோழர்களின் கூட்டத்தைத் தாண்டி  கடந்து சென்றதும்தான்..

தி.மு.க. ஆட்சியின் சிறப்பே இதுதான் என்று கருதுகிறேன்.. காரணம் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும்.. இப்படி கோவிலின் முன்புறம் கடவுள் இல்லை என்போர் மேடை நிகழ்வும் அதே மேடையின் எதிர்ப்புறம்.. சாமி ஊர்வலமும்  ஒரு சேர அமைதியாய் நடப்பது.. இப்படி மக்கள் ஒரே நேரத்தில்..ஒரே இடத்தில் தங்களின் நேர் எதிரான கொள்கைகளை சுமூகமாக நடத்தி மகிழ்வதும் ..நடக்க வாய்ப்பில்லை என்றே உறுதியாக கருதுகிறேன்.. 

காரணம்.. மற்ற இடங்களில்.. மாற்று உணவையே எடுத்து செல்ல முடியாத நிலையில்.. தமிழ்நாட்டில்  மாற்று கொள்கைகளையே கொண்டாடி எடுத்து செல்லும் பண்பை.. இங்கு பெரியார் விதைத்து அதை வளர்த்து செல்லும் நிலையை திமுகவின் திராவிட மாடல் பாதுகாத்து இருக்கிறது என்பதை பொதுமக்கள் கண்ணெதிரே காணும் வாய்ப்பு அங்கே கிடைத்தது. 

இந்தச் சூழலை கெடுக்க சில ஆரிய சங்கிகள் எவ்வளவோ காலமாக முயற்சி செய்து வந்தும் இங்கு வெறுப்பையோ, கலவரத்தையோ நிகழ்த்த  முடியவில்லை என்பதற்கு.. முக்கிய காரணம்  மக்கள் .. அதைவிட முக்கிய காரணம் நடக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான் என்பதில் கடுகளவும் அய்யமில்லை..

31.3.2023 அன்று மாலை மனநிறைவாய் கழிந்தது நாம் புரிந்து கொண்டது இதுதான்.. இங்கு பகுத்தறிவாளனும்..சரியாய்தான் இருக்கிறான் பக்தனும்.. சரியாய்தான் இருக்கிறான்.. பரிவாரங்கள்தான் சரியாய் இல்லை என்பதைத்தான்.

தொகுப்பு: முனைவர் துரை.சந்திரசேகரன்


No comments:

Post a Comment