மனிதாபிமான மிக்க, சீர்திருத்தம் மிகுந்த தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

மனிதாபிமான மிக்க, சீர்திருத்தம் மிகுந்த தீர்ப்பு

குற்றவாளிகளின் குடும்பத்தினரையும் குற்றவாளியாக பார்க்கும் மன நிலையை மாற்ற வேண்டும்  என்று கூறும் அண்மையில் வெளியான ஒரு தீர்ப்பு -  நீதித்துறை வரலாற்றில் மனிதாபிமான மிக்க, சீர்திருத்தம் மிகுந்த தீர்ப்பாகும்.

தன்னுடைய தந்தையோ, கணவரோ செய்யும் தவறுக்கு தான் எப்படி பொறுப்பாக முடியும்? அதற்காக வாழ் நாள் முழுவதும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றால் அவரது குழந்தைகள் எதிர்காலத்தை அரசு கவனிக்க வேண்டும்.

அவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வரவேற்கத் தகுந்த ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி அவர்கள்.

தண்டனையியலில் சீர்திருத்தம் வேண்டும் என்ற நீண்ட நாள் வேண்டுகோளை  எடுத்தியம்பியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

திருப்பூரை சார்ந்த 10 வயது குழந்தை மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் தண்டனை வழங்கி, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூபாய் 10,50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் , மேலும் அந்த தொகை அந்த குழந்தையின் கல்விக்காகவும், மறுவழ்விற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதே சமயத்தில் நீதிபதி, 

குற்றவாளியின் குடும்பத்தை பற்றியும் அவர்களின் எதிர்காலத்தை பற்றியும் மனித நேய அடிப்படையில் மிகத்தெளிவான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது: 

Orphans of Justice : 

Since the convict had to go to jail after nine years of the offence, leaving behind his 32 year old wife and three girl children aged 14, 13 and 7 , his lordship said that these children were generally termed orphans of Justice or invisible victims or hidden victims. They are put to untold misery and deprivation without any fault on their part and directed the Social Defence to ensure livelihood of the convicts family and educational needs of his children.

குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட்டால் எந்த தவறும் செய்யாத அவரின் குழந்தைகள் ஆற்றொணா துயரத்திற்கும், துன்பத்திற்கும் உள்ளாகிறார்கள், அவர்கள் கண்ணுக்கு புலப்படாத அப்பாவிகள், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு,எதிர்காலம் கேள்விக் குள்ளாகிறது, எந்தப் பிழையும் செய்யாதவர்கள் வாழ்வு ஏன் பாழ்பட வேண்டும்? அவர்களுக்கு அரசு - சமூக பாதுகாப்பு துறை உரிய கல்வி வழங்க வேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டான தீர்ப்பை வழங்கியுள்ளார் - உள்ளபடியே வரவேற்கதக்கது.

Yes Jurisprudence said that the punishment should be medicine , it should not be a poison. என்கிறது சட்டவியல். அதன் நீட்சியாக இந்த தீர்ப்பு குற்றவாளியின் குடும்பத்தின் நலனின் அக்கறை கொண்ட தீர்ப்பு , மனிதாபிமான மிக்க தீர்ப்பு.

I wholeheartedly welcome this historical Judgment of His lordship.

மேலும் மேற்கு வங்க அரசு குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட்டால் அவரது குழந்தைகள் கல்வி, எதிர்காலம் பாதிப்படையக் கூடாது என்பதற்காக விதிகளை உருவாக்கி உள்ளது என்றும் கோடிட்டு காட்டியுள்ளார். 

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, தண்டனையியலில் இது ஒரு மைல் கல். பாராட்டி வரவேற்போம்.

- துரை.அருண்,

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்.

No comments:

Post a Comment