ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

பாட்னா, ஏப். 25- பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது.

காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கருநாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, 'மோடி' என்ற குடும்பப் பெயர் வைத்திருப் பவர்கள் எல்லாம் திருடர்களாக இருப்பது ஏன்? என்று கேட்டார். பிரதமர் மோடி, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை குறிவைத்து அவர் அப்படி பேசினார்.

அவர் மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக கூறி, பீகார் மேனாள் துணை முதலமைச் சரும், பா.ஜனதா மூத்த தலைவ ருமான சுஷில்குமார் மோடி, பாட்னாவில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன் றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

  இவ்வழக்கில், ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதே பேச்சுக்கான அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றம், ராகுல்காந்திக்கு ஏற் கெனவே 2 ஆண்டு சிறை தண் டனை விதித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், இதே வழக்கில் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு இருப்பதால், ஒரே குற்றத்துக்காக மீண்டும் தன்னை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி சந்தீப்குமார் முன்னிலையில் நேற்று (24.4.2023) விசாரணைக்கு வந்தது. நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர் களுக்கான நீதிமன்றத்தில் நடந்து வரும் அவதூறு வழக்கு விசார ணைக்கு அவர் மே 15ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித் தார்.

 அன்றைய தினம், சுஷில்குமார் மோடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்குரைஞர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment