‘‘பசு கோமியம் மனிதர்களுக்கு உகந்தது அல்ல!'' கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

‘‘பசு கோமியம் மனிதர்களுக்கு உகந்தது அல்ல!'' கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!

பரேலி,ஏப்.12- மத அடிப்படைவாதிகளாக மூடத்தனத்தில் மூழ்கி பல்வேறு பழக்க வழக்கங்களை அறிவுக்கும், அறிவிய லுக்கும் புறம்பாக பலரும் மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் பசு மாட்டை ‘புனிதம்’ என்று கருதுவதும், பசுவை ‘கோமாதா' என்று கூறிக்கொள் வதுடன், பசு மாட்டின் மூத்திரத்தைக் கோமியம் என்று கூறிக்கொண்டு அந்த மூத்திரத்தை பிடித்துக் குடிப்பதும், தலை யில் தெளித்துக்கொள்வதும், வீடுகளில் தெளித்துக் கொண்டும் இருக்கின்றனர். 

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை செயல்படுத்தி வருகின்ற பாஜகவினரும் பசு மாட்டின் மூத்திரத்தை கோமியம் என்று கூறிக்கொண்டு அதில் மருத்துவ குணம் உள்ளதாக பரப்பியும் வருகின் றனர்.

சில மாதங்களுக்கு முன்பு குஜராத் நீதிமன்றம் ஒரு கருத்தை தெரிவித்தது. பசு கடத்தல் தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த அங்குள்ள டாப்பி மாவட்ட நீதிமன்ற நீதிபதி,

"பசு நமக்கெல்லாம் ஒரு தாயை போன்றது. அதன் ரத்தம் பூமியில் சிந்தக் கூடாது. பசுவின் கோமியம் மனிதர் களுக்கு வரும் நோயை போக்குகிறது" 

எனத் தெரிவித்திருந்தார். 

எந்த அறிவியல் ஆதாரமும் இல்லா மல் நீதிபதி ஒருவரே இவ்வாறு கூறியது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில்,  பசு கோமியம் (சிறுநீர்) மனிதர்கள் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமே (ICAR) தெரிவித்துள்ளது.

உகந்தது அல்ல என்பதோடு மட்டு மல்லாமல் இதை அருந்தினால் மனிதர் களுக்கு பல மோசமான நோய்களும் ஏற்படும் எனவும் அந்நிறுவனம் எச் சரித்துள்ளது.

சுமார் 6 மாதங்களாக 70-க்கும் மேற் பட்ட பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பசு மாட்டின் மூத்திரத்தை சர்வரோக நிவா ரணியாகக் கூறி வருகிறார்கள். மனிதர் களுக்கு சர்வரோக நிவாரணியாக பசுக் களின் சிறுநீர் விளங்குவதாகக் கூறும் அவர்கள், அதை தினமும் குடிக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பல விவாதங்கள் இன்ற ளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த சூழலில்தான், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஓர் ஆய் வறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஆரோக்கியமாக இருந்த பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரை ஆய்வு செய்ததில், மனிதர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரி யாக்கள் அதில் இருப்பது தெரியவந்தது. இந்த பாக்டீரியாக்கள் மனித உடலுக்குள் சென்றால் வயிறு மற்றும் குடல்களில் தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, பசுக்களின் கோமியம் குடிப்பதற்கு உகந் தது அல்ல என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment