கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.க.வில் இருந்து விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.க.வில் இருந்து விலகல்

பெங்களூரு, ஏப் 17- தேர்தலில் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி அடைந்த மேனாள் முதல்-அமைச்ச ரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியில் இருந்து விலகினார்.

கருநாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இத னால் கடும் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த ஜெகதிஷ் ஷேட்டர் பாஜ கவில் இருந்து விலகியுள் ளார்.

கருநாடகத்தில் கடந்த 2008-20-13-ஆம் ஆண்டில் பா.ஜனதா ஆட்சி நடை பெற்றது. முதல் 3லு ஆண்டுகள் எடியூரப்பா முதலமைச்சராக இருந் தார். அவருக்குப் பிறகு சதானந்தகவுடா முதல மைச்சர் பதவிக்கு வந் தார். ஆனால் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எழ அவரை ஒன்றிய அமைச் சராக்கி மீண்டும் ஜெக தீஷ் ஷெட்டர் முதல்-அமைச்சராக நியமிக்கப் பட்டார். இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் என்று சித்தராமையா கூறியுள் ளார். அவர் காங்கிரசில் சேருவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் உப்பள்ளியில் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் உப்பள்ளியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்த அவர் பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த தாக தகவல்கள் வெளி யாகி உள்ளன. ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தார்.



No comments:

Post a Comment