வானத்தில் மிதக்க வேண்டாம் வானதிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

வானத்தில் மிதக்க வேண்டாம் வானதிகள்!

பிஜேபியின் மாநிலத் தலைவர் வானதி சமூகநீதி குறித்து அறிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார்.

பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி விட்டு சமூகநீதியைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பதைத் திசை திருப்புவதுதான் சங்பரிவார்களின் குயுக்தி.

பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவராக வானதிக்குப் பதிலாக பட்டியலினத்தைச் சேர்ந்தவரை போட்டிருக்க வேண்டியது தானே! பிரதமர் மோடிக்குப் பதிலாக பட்டியலினத்தைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது தானே என்றெல்லாம் கூடக் கேட்கலாமே!

குடியரசு தலைவராக மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களை கொண்டு வந்தது பிஜேபி. சரி, பூரி ஜெகந்நாத் கோவிலிலும், அஜ்மீர் உள்பட பற்பல  கோவில்களிலும் அவர் அவமதிக்கப்பட்டபோது பிஜேபி அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

இந்தியாவின் முதல் குடிமகன், முப்படைக்கும் தலைவரான ஒருவர், பட்டியலினத்தைச் சார்ந்தவர் என்கிற ஒரே காரணத் துக்காக அவமதிக்கப்பட்டதுபற்றி நடவடிக்கை எடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் - கண்டித்து அறிக்கைவிட்டதுண்டா வானதிகள்?

இப்பொழுது குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால், அவர் பதவி யேற்குமுன் நடத்தப்பட்ட சடங்குகள் - புனித நீர் தெளித்தது எல்லாம் எந்த அடிப்படையில்?

வைதிகக் கல்யாணத்தில் பார்ப்பனர் அல்லாத மணமகன் சூத்திரன் - சூத்திரன் மந்திரங்களைக் காதால்கூடக் கேட்கக் கூடாது என்ற மனுதர்மத்தின் அடிப்படையில் மணமகனுக்கு ஒரு முகூர்த்த நாழிகைக்குப் பூணூல் தரிப்பது எதைக் காட்டுகிறது?

கல்யாணம் முடிந்த அந்தத் தருணத்திலேயே வெகு ஞாபகமாக அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பையில் போடும் தார்மீகம் என்ன? இதுதான்  வானதிகள் கண்களில் ஒத்திக் கொள்ளும் ஹிந்து ராஜ்ஜியத்தின் ஒரு கூற?

குறுக்கு வழியில் இதற்கும் பெரிய பதவிக்குத்தான் ஆசைப் படுகிறாரோ?

எவ்வளவோ கேள்விகள் உண்டு. பதில் மட்டும் வரவே வராது!

No comments:

Post a Comment