ஊடகங்களுக்கு மாபெரும் அச்சுறுத்தல் [8.4.2023 தேதியிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கம்] - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

ஊடகங்களுக்கு மாபெரும் அச்சுறுத்தல் [8.4.2023 தேதியிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கம்]

நுணுக்கமான செய்தி ஒளிபரப்பையும்,  விமர் சனத்தையும் அரசுக்கு எதிரானவை என்று கூறி, ஒரு ஊடகத்தின் மீது அரசு யதேச்சதிகாரமான நடவடிக்கை எடுக்க முடியாது  என்ற தனது தீர்ப்பின்  மூலம், மீடியா ஒன்  மலையாள மொழி நிறுவனம் ஒளி பரப்புவதற்கு அனுமதி  மறுத்த அரசின்  ஆணையை உச்சநீதிமன்றம், ஊடக  சுதந்திரத்துக்கு எதிரான இந்த  வழக்கில், ரத்து  செய்து தீர்ப்பு வழங்கி யுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அரசுக்கு எதி;ரானது என்ற சொற்றொடர்  ஊடக மற்றும் பத்திரிகைத் துறை அரசை  கட்டாயமாக ஆதரிக்க வேண்டும் என்ற  அரசின் எதிர்பார்ப்பையே பிரதி பலிக்கிறது.

 ஒரு  ஊடக ஒளிபரப்பு நிறுவனத்துக்கு, அது கொண்டிருப்பதற்கு உரிமையுள்ள கருத்துகளளை வெளிப்படுத்துவதன் அடிப்படையில்,  பாதுகாப்பு கிளியரன்ஸ் (ஷிமீநீuக்ஷீவீtஹ் சிறீமீணீக்ஷீணீஸீநீமீ) அளிக்க அரசு  மறுப்பது பேச்சு சுதந்திரம், குறிப்பாக பத்திரிகை  சுதந்திரத்தின் மீது  இது ஒரு மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது. மீடியா ஒன்னின்  (விமீபீவீணீ ளிஸீமீ) மனுக்களை   அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்ற  அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்  கொண்டுள்ளது. அரசுக்கு எதிரான நிலைப் பாட்டை மேற்கொண்டது  என்ற குற்றச் சாட்டின் அடிப்படையிலோ அல்லது அதன்  பங்குதாரர் களுக்கு  ஜமாத்-ஈ-இஸ்லாமி  அமைப்புடன்  தொடர்பு  இருக்கிறது  என்று  பொதுவான ஆதார மற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலோ அந் நிறுவனத்துக்கு  பாதுகாப்பு கிளியரன்ஸ் அளிப்பதற்கு மறுக்கமுடியாது. 

பிரச்சினையின்  தீவிரத்தை கோப்புகளில் கண்ட றிய முடியவில்லை என்பதை கவனித்த  பிறகும் கூட, அந்நிறுவனத்துக்கு பாதுகாப்பு கிளியரன்ஸ் வழங்க  அரசு மறுத்ததை கேரள உயர்நீதி மன்றம் நியாயப் படுத்தியது  எவ்வாறு என்று கூறாமல்  போனது வியப்பு  அளிப்பதாகவே இருக்கிறது என்று உச்சநீதி மன்ற அமர்வு கூறியுள்ளது.

இந்தத்  தீர்ப்பின் மிகமிக  முக்கியமான  ஓரம்சம் என்னவென்றால்,   நீதிமன்றங்களில் முத்திரையிடப் பட்ட  உறை  நடைமுறை  பின்பற்றப்படுவது என்ற  வழக்கத்தை  அது முடிவுக்குக்  கொண்டு  வந்தது என்பதும், பொதுநலனுக்காக பாதுகாப்பு விவரங்களை வெளியிடாமல்  இருப்பதற்கு  அரசுக்கு  ஒரு  மாற்று நடைமுறையைப் பற்றி  ஆலோசனையைக்  கூறியதும்தான். 

மேல்முறையீட்டை  பயன் நிறைந்த  வழியில்  செய்வதை  உறுதிப்படுத்திக்  கொள்வற்கு சம்பந்தப் பட்ட ஆவணங்கள் அனைத்தும்  பாதிக்கப்பட்ட வர்களுக்கு  அளிக்கப்படவேண்டும் என்பதே  இயற்கை நீதி என்று கூறப்படுவதற்கான மேற் கோள்களை  இந்திய  மற்றும் அயல்நாட்டு நீதி மன்றங்களின்  தீர்ப்புகளில் இருந்து இந்த அமர்வு எடுத்துக்  காட்டியுள்ளது. நடைமுறை  உத்தர வாதங் களை  வரையறைப்படுத்தும் நோக்கத்தில் ரகசிய காப்பு  மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற  அரசின்  நியாயமான நோக்கங்களை  அமர்வு  அங்கீகரித்து  ஏற்றுக்  கொண்டுள்ளது. என்றாலும், அனைத்து அறிக்கைகளையும்  அளிக்காமல் இருப்பதற்கான  பொத்தாம்  பொதுவான  அனுமதி அரசுக்கு வழங்க  இயலாது.  பொருத்தமான  சோதனைகள்  மூலம் அது  போன்ற பரிசீலனைகள்  மதிப்பிடப்பட வேண்டும். தேசிய  பாதுகாப்பு காரணங்களுக்காக  ஆவணங் களை வெளியிடாமல் இருப்பதற்கு  போதுமான ஆதாரங்கள் உள்ளனவா  என்பது பற்றியும், ஒரு நியாயமான  மனிதர் அதில் இருந்து அதைப்  போலவே ஊகித்து  உணரமுடியுமா என்பது  பற்றியும்  பரிசீலனை செய்யப்பட்டிருக்க  இயலும்.

விவரங்களை  தேசிய பாதுகாப்பு காரணங் களுக்காக  வெளியிடாமல் இருப்பதனையும்,   ஒரு நியாயமான விசாரணை நடத்தப்படுவதை உறுதிப் படுத்திக்  கொள்வதையும் சமன் செய்து கொள்ளும் நோக்கத்தில், முக்கியமான  பகுதிகளை  மறைத்து விட்டு, அளிக்கப்பட்ட ஆவணத்தின்  சாரத்தை பாதிக்கப்பட்ட வாதிகளுக்கு அளிப்பது என்ற மாற்று நடைமுறைகளைப்  பற்றிய  ஆலோசனையை உச்ச நீதிமன்ற  அமர்வு தெரிவித்துள்ளது. தேசிய  பாது காப்பு விவரங்களை  வெளியிடுவதற்கு  அரசு தவிர்ப்பு  வேண்டும்  போதெல்லாம்  நீதிமன்றம் ஒரு  அமிகஸ் குரியாவை (ணீனீவீநீus நீuக்ஷீவீணீமீ) நியமித்து  அவருக்கு அந்த  விவரங்கள் அளிக்கப்படச் செய்யலாம்.

நன்றி:  'தி இந்து' 08-04-2023

தமிழில்:  த.க.பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment