இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரிப்பு

மும்பை, ஏப்.7- இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.  மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பொரு ளாதார கண்காணிப்பு மய்யமான (சிஎம்அய்இ) இதனை தெரிவித்துள்ளது.  அதன்படி, கடந்த பிப்ர வரியில் வேலைவாய்ப்பின்மை 7.5 சதவீதமாக இருந்த நிலையில் மார்ச் மாதம் 7.8 சதவீதமாக  அதிகரித் துள்ளது. 

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 8.4 சதவீத மாகவும், கிராமப்புறங்களில் 7.5 சதவீதமாகவும் உள்ளது. இது குறித்து சிஎம்அய்இ அமைப்பின் நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறு கையில், “இந்தியாவின் தொழிலாளர் சந்தை 2023 மார்ச் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது. நாட்டில் வேலை வாய்ப்பின்மை பிப்ரவரியில் 7.5 சத வீதமாக இருந்த நிலையில் அது மார்ச்சில் 7.8 சதவீதமாக அதிகரித் துள்ளது. இதன் தாக்கத்துடனேயே தொழிலாளர்  சக்தி பங்களிப்பும் 39.9 சதவீதத்தில் இருந்து 39.8 சதவீதமாக  குறைந்துள்ளது. அதா வது, வேலைவாய்ப்பு விகிதம் பிப்ரவரி யில் 36.9 சதவீதத்தில் இருந்தது, மார்ச் மாதத் தில் 36.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. எண்ணிக் கையில் குறிப்பிட வேண்டுமென்றால் 409.9 மில்லிய னில் இருந்து 407.6 மில்லியனாகக் குறைந்துள்ளது. மாநில வாரியாக வேலைவாய்ப் பின்மை நிலவரத்தைப் பார்க்கும்போது அரியானாவில் அதிகபட்சமாக 26.8 சத வீதம்  வேலைவாய்ப்பின்மை இருக்கிறது. ராஜஸ்தானில் 26.4 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 23.1 சதவீதம், சிக்கிமில் 20.7 சதவீதம், பீகாரில் 17.6 சதவீதம்,  ஜார்க்கண்டில் 17.5 சதவீதம் வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. உத்தரகண்ட், சத்தீஸ்கர், புதுச்சேரி, குஜ ராத்,  கருநாடகா, மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலை வாய்ப்பின்மை குறைவாக உள்ளது.

No comments:

Post a Comment