2024 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் தலைவர்கள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

2024 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் தலைவர்கள் தீவிரம்

கொல்கத்தா, ஏப். 24- 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாசிச பாஜ கவை முறியடிக்க எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம் என்று பல்வேறு தரப்பிலும் தொடர்ச் சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

நாடுமுழுவதும் கட்டுப்படுத் தப்படாமல் உயர்ந்து கொண் டிருக்கும் விலைவாசி, படித்த இளைஞர்களிடையே பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை, தொழில் நிறுவனங்கள் நசிவு, விவ சாயிகள் சந்தித்து வரும் பாதிப் புகள், சமையல் எரிவாயு உருளை யின் தொடர்ச்சியான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடுமுழுவதும் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். அதனால்எதிர்வரும் 2024 பொதுத்தேர்தல்  பாஜகவுக்கு பெரும் சரிவைத்தருகின்ற தேர்த லாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே எதிர்க்கட்சி களின் ஒற்றுமையை வலியுறுத்தி அவ்வப்போது அதற்கான முயற்சிகளில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை இன்று பிற்பகலில் கொல்கத்தாவில் சந்தித்துப் பேசவிருக்கிறார். மேற்கு வங்க மாநில செயலகம் நபன்னா வளாகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த  மார்ச் மாதத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களை ஒருங்கிணைக்கின்ற பணி களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டு வருகின்ற னர் என்பதும் நினைவில் கொள் ளத்தக்கது.


No comments:

Post a Comment