ஆதிதிராவிட, பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ரூபாய் 18,670 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

ஆதிதிராவிட, பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ரூபாய் 18,670 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை,ஏப்.12-சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று (11.4.2023) நடந்தது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்ன தமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் அரசாக நமது அரசுசெயல்பட்டு வருகிறது.

அனைத்து வளர்ச்சியும் அனைவ ரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நோக்கம், லட்சியம், பாதை. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர தனி அக்கறை செலுத்தி திட்டங்கள் தீட்டி வருகிறோம்.

தனி சட்டம் இயற்றப்படும்:

புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம் பாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ள இந்த நிதியாண்டில் ரூ.10 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான ரூ.77,930 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக் காக ரூ.17,075 கோடி மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்துக்காக ரூ.1,595 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது.

உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான சட்டமுன் வடிவை அறிமுகப்படுத்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும்.

கல்வி புகட்டுதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், அதிகாரம் பொருந்திய பொறுப்புகளில் அமர வைத்தல், இட ஒதுக்கீடுகள், பொருளாதார உதவிகள், மனைகள் தருதல், வீடுகள் வழங்குதல் இவை அனைத்தும் கண்ணும் கருத்துமாக கவனித்து வழங்கப்பட்டு வருகிறது.

இத்தோடு அரசின் கடமை முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. சுயமரி யாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்கு வதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடுகளால், தொலைநோக்குப் பார்வையால், கண் காணிப்பால் மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிவிடலாம்.

ஆனால் சமூக வளர்ச்சியும், சிந்தனை  வளர்ச்சியும் அப்படிப்பட்டது அல்ல. அதுமக்கள் மனங்களில் உருவாக வேண்டும்.

மக்கள் மனதில் மனமாற்றங்கள் ஏற்பட வேண்டும். இது மிகச் சீக்கிரமாக ஏற்பட்டுவிடாது என்பது உண்மைதான்.

பல்லாயிரமாண்டு அழுக்கை சில பத்தாண்டுகளில் சரிசெய்திட முடி யாது என்பது உண்மைதான். அதே நேரத்தில் சமூக வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியை உருவாக்கும் நமது விழிப்புணர்வு பயணம் என்பது தொய்வில்லாமல் தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment