வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா கிளைகள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா கிளைகள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள்

ஒக்கநாடு மேலையூரில் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

உரத்தநாடு, ஏப். 8- உரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூர், ஒக்கநாடு கீழை யூர், மேலவன்னிப்பட்டு, கீழவன்னிப் பட்டு, கருவிழிக்காடு, பெரியார்நகர், மழவராயர்தெரு, கழக கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட் டம் 5-.4.-2023 அன்று மாலை 7 மணி யளவில் ஒக்கநாடு மேலையூர் அ.இரா ஜப்பா இல்லத்தில் நடைபெற்றது.

ஒக்கநாடு கிளைச்செயலாளர் வீரத் தமிழன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் இயக்க செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்பு குறித்து தொடக்கவுரையாற்றி னார்,

தொடர்ந்து, ஒக்ககாடுமேலையூர் இளைஞரணி தோழர்கள் விஜய், இரகு, சாமிநாதன், அருனேஷ், பெரியார்மணி, வினோத், பாண்டியராஜன், சின்னை யன், ஜெயராமன், தென்னகம், இராச காந்தி, கிளைத்தலைவர் அ.இராசப்பா, பொறியாளர் பாலகிருஷ்ணன், மாண வர் கழகத் தோழர்கள் தமிழ்வேந்தன், இளமாறன், பரணிதரன், அறிவரசு, அறிவு, இன்பச்சுடர் ,பெரியார்நகர் இராமதாஸ், சக்திவேல், மகேசுவரன், கீழவன்னிப்பட்டு செந்தில்குமார், கிழக்கு பகுதி செயலாளர் தன்மானம், ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், நகர செயலாளர் ரெ.ரஞ்சித் குமார், தஞ்சை நகர அமைப்பாளர் வன்னிப்பட்டு செ. தமிழ்ச்செல்வன், மாவட்ட ப க இணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் க.அறிவரசு, உரத்தநாடு துணைச் செய லாளர் க.மாரிமுத்து மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் கவிபாரதி, பெரியார் வீரவிளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராம கிருஷ்ணன், ஒன்றியத்தலைவர்   த.ஜெக நாதன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

மாவட்டச்செயலாளர் அ.அருண கிரி, மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சியடையும்  வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த கழக தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்  இயக்கத்தின் கட்டுப்பாடுகள் குறித்தும் கொள்கை தலைமையை முன்னிறுத்தி கழகத்தோழர்கள் செயல்பட வேண்டும் எனவும் உரையாற்றினார்.

இறுதியாக கழக பிரச்சாரம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர் பார்ப்புகள், கழகத்தோழர்கள் அற் பணிப்பு உனர்வு டன் செயல்பட வேண் டியதின் அவசியம் குறித்து கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் உரையாற்றினார்.

தெற்கு நத்தம் க.சசிக்குமார், தெற்கு நத்தம் நாகராசு  தந்தையார் சிவஞானம், ஒக்கநாடு மேலையூர் வீரத்தமிழன் தந்தையார் நாராயணன், தலையாமங் கலம் இராமதாஸ் தந்தையார் தங் கையன், மண்டலகோட்டை ஞானம்  தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட் டது.

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாள்கள்  57 பொதுக்கூட்டங்களில்உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

தந்தைபெரியாரின் மனித உரிமைப் போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு விழா தெருமுனை கூட்டங் களை கிளைகள் தோறும் நடத்துவது,

புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது,

ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது,

என முடிவு செய்யப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள உரத்தநாடு வட்டத்தில்  11 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது உரத்த நாடு  மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள்   மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்  இத்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் இக் கூட்டம் வலியுறுத்து கிறது.

டெல்டா மாவட்டங்களிலும் நிலக் கரி எடுக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து 8.4.2023 அன்று மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடை பெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கழகத்தோழர்களும்  பெரு மளவில் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.          

No comments:

Post a Comment