இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள சொத்து ஃபோர்ப்ஸ் ஏட்டின் படப்பிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள சொத்து ஃபோர்ப்ஸ் ஏட்டின் படப்பிடிப்பு

புதுடில்லி,ஏப்.7- உலகம் முழுவது முள்ள வெறும் 2  ஆயிரத்து 640 பெரும் பணக்காரர்களின் கைகளில் 12.2 டிரில்லியன் டாலர் அளவிற் கான சொத்துக்கள் குவிந்திருப்பதாக போர்ப்ஸ் ஏடு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஒரு டிரில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 82 லட்சம்  கோடியாகும். இங்கு 2640 பணக் காரர்களிடம் குவிந்திருக்கும் சொத்து மதிப்பு  12.2 டிரில்லியன் டாலர் என்றால் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அதாவது இந்தி யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (நிஞிறி) மதிப்பை விட மூன்றரை மடங்கு (350 சதவிகிதம்) அதிகமான சொத்து மதிப்பை 2640  பணக்காரர்கள் மட்டும் வைத்திருக் கிறார்கள். இந்தியாவின் ஜிடிபி மதிப்பு  3.46 டிரில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுக்கும், 2022-ஆம் ஆண்டில் பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பில் சுமார் 500 பில்லியன் டாலர் அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், 12.2 டிரில்லியன் டாலரை அவர்களை வாரிக் குவித்துள்ளனர். 

போர்ப்ஸ் ஏட்டானது, 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் மொத்த பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில்மட்டும் உலக அளவில் சுமார் 2640 பில்லியனர்கள் இருப்பதாகவும், அவர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்தும் முழு விவரத்தை வெளியிட்டுள்ளது.   “2022-இல் பெரும்பணக்காரர் (ரூ. 8200 கோடிக்கம் அதிகமான சொத்து கொண்டவர்கள்) பட்டியலில் சுமார் 2,668 பேர் இருந்தனர். ஆனால் மொத்த சொத்து மதிப்பு குறைந்துள்ளதால் 254 பேர் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர். தனியார் மற்றும் பொதுச் சந்தையில் 2022 ஒரு கடினமான காலகட்டமாக இருப்பதால் உலகம் முழுவதும் பாதிப்பு உள்ளது. இந்த ஆண்டு உலகின் மொத்த பெரும் பணக்காரர் எண்ணிக்கையும் சரிவைக் கண்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாக தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர், பணவீக்கம் அதிகரிப்பு, மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை நிறுத்தாமல் உயர்த்துவது மற்றும் கிரிப்டோ சந்தை யில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய சந்தையில் வங்கிகளின் தடுமாற்றம் ஆகியவை முக்கிய பாதிப்புகளாக உள்ளன” என்று போர்ப்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் 

10 பெரும்பணக்காரர்கள்

இந்தியாவின் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 83.4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 9-ஆவது இடத்தில் உள்ளார் என்றும் போர்ப்ஸ் கூறியுள்ளது. இந்திய அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ஷிவ் நாடார், சைரஸ் பூனவல்லா ஆகியோர் முதல் 4 இடத்தை பிடித்துள்ளனர். ஸ்டீல் அதிபரான லக்ஷ்மி மிட்டல் 5-ஆவது இடத்தையும், ஜிண்டால் குழுமத் தலைவர் சாவித்ரி ஜிண்டால், சன் பார்மாவின் திலீப் ஷாங்வி மற்றும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் டி-மார்ட் ராதாகிஷன் தமானி ஆகியோர் அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளனர். குமார் பிர்லா 9-ஆவது இடத்திலும், உதய் கோடக் 10-ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 166 ஆக இருந்த நிலையில், அது 2023-இல் 169 ஆக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment