கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அச்சம் வேண்டாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அச்சம் வேண்டாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,மார்ச் 22- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று (21.3.2023) செய்தியாளர்களிடம் கூறுகையில்,  "தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக் கும், அதிகரித்துக் கொண்டிருக்கிற இந்த கரோனா வகை யானது XBT, BA2  என்ற வகையிலான உருமாற்றம் பெற்ற வைரஸ் பாதிப்புகள்தான். இதனால் பெரிய அளவில் உயிரிழப்பும் இல்லாத நிலையும், தீவிர சிகிச் சைப் பிரிவுக்கு செல்லாத நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2, 3 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு செய்யப்படும் இரண்டு சதவீத ரேண்டம் பரிசோதனையில் பாதிப்பு எண்ணிக்கை 6-7 என்ற வகையில் உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பாதிப்பு என்பதும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்த்து பெரிய அளவில் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இந்த பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டியது என்பது அவசியமான ஒன்று" என்று அவர் கூறினார்.

அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உடல்நலம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நேற்று முன்தினம் அவருடைய மாதிரிகளை பரிசோ தித்து பார்த்ததில், அவருக்கு கரோனா பாதிப்பு இருந்திருக்கிறது. அது இந்த ஒமைக்ரான் பாதிப்பின் ஒருவகைதான். இதனால் அவரை, கரோனா வார்டிற்குள் அனுமதித்து வைத்துள்ளனர். எனவே, அவர் நலமுடன் இருக்கிறார். நேற்றுகூட (20.3.2023) அனைவரிடமும் பேசினார்" என்று அவர் கூறினார்.

ஆளுநர் மாளிகை அருகே 

பெண்கள் சங்கம் போராட்டம்!

சென்னை, மார்ச் 22- இணையதள சூதாட்டங்களை (ஆன்லைன் ரம்மி) தடை செய்யும் தமிழ்நாடு அரசின் மசோதாவை அண்மையில் ஆளுநர் திருப்பி அனுப்பி னார். இதனை கண்டித்து 20.3.2023 அன்று ஆளுநர் மாளிகை அருகே பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கையெ ழுத்து இயக்கம் நடத்தினர். அவற்றை பிப்.1 அன்று ஆளுநர் மாளி கையில் ஒப்படைக்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஆளுநரை விரைவில் சந்திக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதற்கிடையில், ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் முதலாளிகளை அழைத்துப் பேசிய ஆளுநர், மார்ச்  6ஆம் தேதி மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பி னார். கடந்த இரண்டு  ஆண்டுகளில் ஆன்லைன் சூதாட்டத்தால்  45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள் ளனர். ஆளுநரின் இந்த நடவடிக்கை யை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை மாதர் சங்கம் அறிவித்தது. இதன்படி, திங்க ளன்று சைதாப் பேட்டை நீதிமன்றம் அருகே கூடியவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ராதிகா செய்தி யாளர்களிடையே கூறியதாவது, “ஆன்லைன் சூதாட் டத்தை தடை செய்யும் அரசின் மசோதா வுக்கு ஒப்புதல் வழங்க கோரி மாதர் சங்கம் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 1.30 லட்சம் பேர் கையெ ழுத்திட்டுள்ளனர். மக்களின் உணர்வு களை மதிக்காமல் செயல்படும் ஆளு நரை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார்.  

“ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத் தினார். 

இதனைத் தொடர்ந்து கிண்டி வட்டாட்சியர் பரணி, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து மாதர் சங்கத் தலைவர்களிடம் இருந்து கையெழுத்து மனுக்களை பெற்றுக் கொண்டார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொருளாளர் வ.பிரமிளா, சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ். சரவணசெல்வி, ம.சித்ரகலா (தென் சென்னை), பாக்கியலட்சுமி, பூங்குழலி (வட சென்னை), சாந்தி (மத்திய சென்னை), சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி, விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.`

No comments:

Post a Comment