ஜனநாயகத்தை அழிக்கும் சக்தி பி.ஜே.பி. - இரா.முத்தரசன் சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

ஜனநாயகத்தை அழிக்கும் சக்தி பி.ஜே.பி. - இரா.முத்தரசன் சாடல்

நாகர்கோவில், மார்ச் 27- நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். இந்திய கம்யூ னிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று  (26.3.2023) நாகர்கோவிலில் செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒரு மணி நேரம் கூட நடத்த முடியவில்லை. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜனதா அரசு நிராகரிக்கிறது. அதானியின் ஏஜென்டாக பிரதமர் மோடி செயல்படுகிறார்.

அமலாக்கத் துறையை அரசி யல் ஆதாயத்திற்காக பா.ஜனதா பயன்படுத்தி வருகிறது. ராகுல் காந் திக்கு சிறை தண்டனை வழங்கிய 24 மணி நேரத்தில் அவருடைய மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இந்தியா வில் தற்போது ஜனநாயகம் காணா மல் போய் விட்டது. ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது. தற்போது ராகுல்காந்தியின் பக்கம் நாடே உள்ளது. இல்லத்தரசிக ளுக்கு ரூ.1,000 வழங்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா தலைவர் அண்ணா மலை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரியர் தொகையையும் சேர்த்து ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியிருப்பது நல்ல கருத்து தான்.

பிரதமர் மோடி தேர்தல் சமயத் தில் ஒரு நபரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். தற்போது வாக்குறுதி அளித்து 9 வருடம் ஆகிறது. இதனையும் அரியர் தொகையுடன் சேர்ந்து வழங்க ஒன்றிய அரசிடம் அண்ணாமலை அறிவுறுத்த வேண்டும். 2024இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து மாற்று ஆட்சி அமையும். பழைய ஓய்வூதிய திட்டம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கடுமையான நிதி நெருக்கடி இருந்தது. அந்த நிதி நெருக்கடியை சமாளித்து முதலமைச்சர் 

மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது என் பது மாநில, ஒன்றிய அரசு இணைந்து தான் செயல்படுத்த முடியும். 2014ஆம் ஆண்டு ஆட் சிக்கு வந்த பிரதமர் மோடி தமிழ் நாடு மீனவர்களுக்கு உரிய பாது காப்பு வழங்கப்படும் என வாக் குறுதி அளித்திருந்தார்.

ஆனால் அதனை அவர் நிறை வேற்றவில்லை. தினமும் இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப் படுகிறார்கள். எனவே கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment