பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சைல்டு லைன் சார்பாக இணைய வழி குற்றம் (சைபர் க்ரைம்) பற்றிய பயிற்சிப்பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சைல்டு லைன் சார்பாக இணைய வழி குற்றம் (சைபர் க்ரைம்) பற்றிய பயிற்சிப்பட்டறை

தஞ்சை, மார்ச் 15- தஞ்சாவூர் சைல்டுலைன்- 1098, தேசிய இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலை இணைந்து "குழந்தைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் இணைய வழி குற்றங்கள் மற்றும் பாதுபாப்பிற் குரிய வழிகள் குறித்த பயிற்சி யானது, சைல்டுலைன் குழு உறுப்பினர்களுக்கும், முதலாம் ஆண்டு பயிலும் சமூகப் பணித் துறை மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்களுக்கும் நடை பெற்றது. 

சைல்டுலைன் இணை நிறுவன இயக்குநர் பாத்திமராஜ் தொழில் நுட்ப மோசடியில்  எவ்வாறு ஈடுபடுகிறார்கள், அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், இணைய தள அடிமையாகுதல் பற்றிய தனது அறிமுகவுரையில் விளக்கமாக கூறினார். 

இந்நிகழ்ச்சியில், சைல்டுலைன் நோடல் நிறுவனம் இயக்குநர் முனைவர் ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின் தலைமையுரையில் "இணைய வழி (மோசடிகள்) விழிப்புணர்வு" குறித்த தவல்களை வழங்கினார். 

மெய்நிகரான வாழ்க்கையில்

இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் இணை பேராசிரியர் மற்றும் தேசிய இணைய பாது பாப்பு வள மய்யத்தின் பொறுப் பாளர் முனைவர் நாராயணன் குழந்தைகளுக்கான இணைய வழி பாதுகாப்பினைப் பற்றி பயிற்சி அளித்தார். 

அவர் தமது உரையில் "நாம் மெய் நிகரான வாழ்க்கையில் பயணிக்கிறோம், அதில் ஒன்று நடைமுறை வாழ்க்கையும், மற் றொன்று இணைய வழி வாழ்க் கையும் ஆகும். இந்த இணைய வழி உலகத்தில் உருவம் அற்ற நபர்க ளால், நமது தனிப்பட்ட இணைய வழி உரையாடல் மற்றும் நிழற் படங்கள் அனைத்தும் நமக்கு தெரியாமலே திருடப்படுவது சைபர் குற்றங்களாக கருதப்படு கிறது" என்றார்.

குறிப்பாக தனது விளக்கக் காட்சியில் "பாதுகாப்பு முட்படை கள் பற்றியும், முன் எச்சரிக்கைகள் பற்றியும் குழந்தை கள் எவ்வாறு தொழில் நுட்பங் களை கையாள வேண்டும் என்ற யுக்திகளையும்" சிறப்பாக விளக் கினார்.

குழு விவாதம்

இந்த பயிற்சியின் முடிவில் பொது மக்களுக்கு சைபர் க்ரைம் பற்றிய தகவல்கள் கொண்டு சேரும் விதமாக பங்களித்த அனைவரும் மூன்று குழுவாக பிரிந்து குழுவிவாதமும் கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது. 

அய்சல் லைன் இணை நிறுவ னத்தின், திட்ட ஒருங்கிணைப் பாளர் சுரோஷ் நன்றியுரையை வழங்கி னார். இந்நிகழ்ச்சியின் ஒருங்கி ணைப்பை சைல்டுலைன் நோடல் நிறுவனத்தின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனபால் செய்திருந்தார். 

No comments:

Post a Comment