பெண்களின் முன்னேற்றத்தில் முன்னிலையில் தமிழ்நாடு - ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

பெண்களின் முன்னேற்றத்தில் முன்னிலையில் தமிழ்நாடு - ஆய்வில் தகவல்

புதுடில்லி, மார்ச் 22- இந்தியாவில் 15.4 விழுக்காட்டளவில் பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்லும் நிலையில், தமிழ் நாட்டில் அது 35.1 விழுக்காடாக உள்ளது. மகளிர் நாளை யொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைந்திருந்தாலும், பல ஆண்கள் மனதில், பெண் என்றாலே ஆண்களுக்கு அடிமை என்ற எண்ணம்தான் இருக்கிறது என்றும் அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்றார்.

இந்த நிலையில் பெண்கள் முன்னேற்றம், பாலின சமத் துவம் ஆகியவை குறித்து NSO, CRIF, National family health survey  ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில், தேசிய சரா சரியை விட தமிழ்நாடு அதிகம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 

உயர்கல்வியில் சேரும் பெண்களின் விகிதம் இந்தியாவில் 27.3 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 49 விழுக் காடாக உள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்களின் விழுக்காடு இந்தியாவில் 70.3 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழ் நாட்டில் 73.9 விழுக்காடாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் 43.4 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 34.8 விழுக்காடு மட்டுமே உள்ளது. குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் 67.6 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 48.2 விழுக்காடாகவே உள்ளது. பேறு கால உதவி பெறும் பெண்களை பொறுத்தவரை தேசிய சராசரி 65.3 விழுக்காடக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 98.4 விழுக் காடாக உள்ளது. பாதுகாப்பான பிரசவங்களில் தமிழ்நாடு 79.3 விழுக்காட்டிலும், இந்தியா 33.6 விழுக்காட்டிலும் உள்ளது.

இந்தியாவில் 15.4 விழுக்காட்டளவில் பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்லும் நிலையில், தமிழ்நாட்டில் அது 35.1 விழுக்காடாக உள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் இந்தியாவில் 19 விழுக்காட்டளவில் பெண்கள் பணியாற்றும் நிலையில், தமிழ்நாட்டில் 40.4 விழுக்காடு பேர் பணியாற்று கின்றனர். அறிஞர் அண்ணா தொடங்கி, கலைஞர், ஜெய லலிதா ஆகிய முதலமைச்சர்களால் கடந்த 70 ஆண்டுகளாக பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதே தேசிய சராசரியைவிட, தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதற்கு காரணம் என்று இந்த ஆய்வுகளில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment