''நீர் தெளித்தலை'' "கும்ப அபிஷேகம்" ஆக்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

''நீர் தெளித்தலை'' "கும்ப அபிஷேகம்" ஆக்கினர்

எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டுச் சான்று

தமிழில் குடமுழுக்கு நடத்த, நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த "தமிழ்ப் பகைவர்கள்" செயல் மன்னிக்க முடியாதது.

தமிழ்நாட்டில் முன்பு தமிழில் தான் குடமுழுக்கு நடைபெற்றது என்பதற்கு ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கல்வெட்டுகளில் அந்நிகழ்வு "நீர் தெளித்தல்", "கலசம் ஆடல்", "புனலாட்டு" என்று கூறப்படுகிறது.

"கி.பி. 770 ஆம் ஆண்டு பாண்டிய மன்னன் மாறஞ்சடையனின் அமைச்சன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆன மாறன்காரி கோயில்கட்டி நீர்த்தெளியாமல் இறந்தான். அவனுக்குப் பின் அமைச்சன் ஆன அவன் தம்பி பாண்டிய மங்கல விசையரையன் ஆன மாறன் எயினன் முக மண்டபம் செய்து நீர்த்தெளித்தான்.''

இதற்குரிய கல்வெட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் ஆனைமலை குகைக் கோயிலில் இக்கல்வெட்டு இன்றும் உள்ளது.

கல்வெட்டு 1-7

1.  கோ மாறஞ்சடையார்க்கு உத்தர மந்திரி களக்குடி 

2.  வைத்யன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய 

3.  மாறன் காரி இக்கற்றளி செய்து நீர்த்தெளியாதே 

4.  ஸ்வர்க்காரோகணம் செய்த பின்னை அவனுக்கு 

5.  அனுஜன் உத்திரமந்திரிபதம் எய்தின பாண்டியமங்கல 

6.  விசையரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபம் 

7.  செய்து நீர்த்தெளித்தான்.

தகவல்: புலவர் பேராசிரியர் செ.இராசு, ஈரோடு


No comments:

Post a Comment