தமிழர் தலைவரை, ஒட்டுமொத்த ஊர்மக்களும் எழுந்து நின்று வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தினர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

தமிழர் தலைவரை, ஒட்டுமொத்த ஊர்மக்களும் எழுந்து நின்று வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தினர்!

பெண்ணாடத்தில், ஆசிரியருக்கு முன்பு பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன், ஆசிரியரின் பெருமைகளைப்பற்றி அடுக்கிக் கொண்டு வருகிறார். அதாவது, ”தந்தை பெரியாரின் கொள்கைகளை ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்து, கல்லாத மக்களின் காப்பரணாக, தமிழ்ச்சமூகத்தின் பாது காவலனாக விளங்கிக் கொண்டிருக்கிறார்! அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார், களத்திலே இன்று வரை! இந்த 90 வயதில் நம்முடைய குடும்பத்திலே இருக்கிறவர் ஊர் ஊராக போவாரா? பேசுவாரா? இதுபோன்ற மேடை களிலே ஏறுவாரா? இறங்குவாரா? அந்தக் காலத்திலே மூடநம்பிக்கை மாதிரி 60 வயசு வாழ்ந்தாலே பெரிய விசயம் என்று சொல்லி, மணிவிழா பண்ணிகிட்டு, அத்தோடு வீட்டோடு முடங்கிடுவாங்க? 

இப்படி இருந்த சமூகத்தை தலைகீழாக மாற்றியது இந்த இயக்கம்! அந்த இயக்கத்தை பெரியார் இருந்தால் எப்படி பாதுகாப்பாரோ, எப்படி நேசிப்பாரோ, மக்களுக்கு வழிகாட்டுதல்களை செய்வாரோ அதே பணியை தமிழர் தலைவர் ஆசிரியர் செய்து கொண்டிருக்கிறார்! எப்படிப் பட்ட நிலையில் தெரியுமா தோழர்களே? அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 33 ஆம் ஆண்டில் அடி யெடுத்து வைத்திருக்கிறார். நடைமுறையில் பலரும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு அமைதியாகி விடுவார்கள். ஆனால், 33 ஆண்டுகளாக மரண பயம் இல்லாத மகத்தான தலைவராக இந்தத் தலைவர் ஒருவர்தான் வலம் வந்துகொண்டிருக்கிறார்.  இந்தப் பெரும் பயணத்தைத் தொடங்கும் போதுகூட, தமிழ் நாட்டின் முதலமைச்சர் கூட, “அய்யா, நீங்கதான் எங் களுக்கு இருக்கிற மூத்த தலைவர். இவ்வளவு கடுமை யான வெய்யில் காலத்தில் இப்படியொரு நீண்ட பிரச்சாரத்தை மேற்கொள்ளலாமா?” என்று கேட்டார். 

நூற்றாண்டைத் தாண்டி 

வாழ வேண்டும்....

எங்கள் தலைவர், ‘‘சமூகநீதியை பாதுகாக்கும் பணியில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைப் பிரச்சாரம் செய்யும் பணியில், என்னுடைய உயிர் போனால் கூட அதை மகிழ்ச்சியாக வரவேற்பேனே தவிர, வீட்டிலே முடங்கியிருக்க மாட்டேன்” என்று சொல்லி இன்றைக்கு இங்கே வந்திருக்கிறார்! எங்கள் தலைவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும்! இன்னும் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்! மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும்! இன்னமும் மதவெறியும், ஜாதி வெறியும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அதை நிர்மூலமாக்கி எல்லோருக் கும் எல்லாமுமான இடம் நோக்கி பயணிக்கச் செய்யக் கூடிய வல்லமை மிக்க தலைவராக எங்கள் தலைவர் இருக்கிறார். இப்படியொரு துணிச்சலை தந்தை பெரியாரைத் தாண்டி, தமிழர் தலைவரைத் தாண்டி இன்னொருவரிடம் நாங்கள் காணவில்லை. இவர் நூற்றாண்டைத் தாண்டி வாழ வேண்டும் என்று எல் லோரும் எழுந்து நின்று, இந்தத் தலைவர் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துங்கள்’ என்று சொன்னதும், அதுவரை யிலும் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சியேறி வெடிக் கும் நிலையில் இருந்த ஒட்டுமொத்த மக்களும் சட் டென்று எழுந்து நின்று, ‘‘தமிழர் தலைவர் வாழ்க!”, ”ஆசிரியர் வாழ்க!”, ”வீரமணி வாழ்க!” என்று அவர வருக்கு தெரிந்த, உணர்ச்சி மிகுந்த அந்தக் கணத்தில் வாயில் வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, அந்த இடமே கிடுகிடுக்கும் வண்ணம் கைகளை உயர்த்தி உணர்ச்சிப்பூரிப்பால் முழக்கமிட்டனர். மேடையும் அதில் பங்கெடுத்துக் கொண்டது. ஆசிரியரும் எழுந்து நின்று அந்த வாழ்த்தைக் கைகூப்பி ஏற்றுக்கொண்டார். அந்த இடமே கொஞ்ச நேரம் பரபரப்பாகிவிட்டது. அந்த உணர்ச்சி அடங்க சிறிது நேரமாகிவிட்டது.


No comments:

Post a Comment