ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநரின் நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநரின் நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு கண்டனம்

சென்னை, மார்ச் 10- ஆளுநரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை ஆய்வுக்குழு தலைவர் நீதிபதி சந்துரு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு 4 மாத அவகாசம் எடுத்திருக்க தேவையில்லை என்றார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு என நீதிபதி சந்துரு தெரிவித் துள்ளார். தற்போதைய மசோதா என்ன வடிவத்தில் உள்ளதோ அதே வடிவத்தில் தான் அவசர சட்டம் இயற்றப்பட்டது. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? என நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநரின் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த நடவடிக் கையை தாமதப்படுத்தும் செயலாகும்.  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தமிழ்நாடு அரசு மோசடியாக பார்க்கிறது. மோசடியாகக் கருதி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; ஒன்றிய அரசுக்கே அதி காரம் உள்ளது என்பது அரசமைப்புச் சட்டம்பற்றி அறியாத வர்கள் கூறுவது என நீதிபதி சந்துரு கூறினார். 

No comments:

Post a Comment