விழியின் வழியில் உலகைப் பார்க்கிறோம் அதனைப் பாதுகாப்பது தலையாய கடமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

விழியின் வழியில் உலகைப் பார்க்கிறோம் அதனைப் பாதுகாப்பது தலையாய கடமை

விழியின் வழியில் உலகைப் பார்க்கி றோம் அதனைப் பாதுகாப்பது தலையாய கடமை ஆகும்

நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகைப் பார்க்க நமக்கு கிடைத்த அந்த உறுப்பை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது குழந்தைகள் முதல் பெரிய வர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சினை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சினை ஏற்படும். ஆனால் குழந்தை களுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது.காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் தொலைகாட்சி, அலைபேசி, போன்றவற்றை பார்க் கின்றனர். முன்பெல்லாம் நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள். தற்போது அலை பேசி கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனாலேயே சிறுவயது முதல் கண்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறது.

பச்சைக் காய்கறிகள், மஞ்சள் மற்றும் சிவப்புப் பழங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கண் புரை, கண் நரம்பு சிதைவு, விழித்திரை புள்ளி சிதைவு ஆகியவை வராமல் தடுக்க புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சூரிய கதிர்களின் புற ஊதாக்கதிரிலிருந்து கண் களை காத்துக் கொள்ள குளிர் கண்ணாடி களை அணிய வேண்டும்.  ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் போது பாதுகாப்புக் கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டும். கணினியைப் பார்த்து வேலை செய்யும் போது இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்.

கணினியை இருபது அடி தொலைவில் பார்க்க வேண்டும். முக்கியமாக தூசி விழுந்தாலோ அல்லது இதர ஏதாவது ஒரு காரணத்திற்காக கண்களை கசக்குவதோ, அல்லது தொடும் முன்போ கைகளை நன்றாக கழுவ வேண்டும். கண் தொடர்பான நோயிற்கு நேரடியாக கடையில் மருந்து வாங்குவதை தவிர்த்து விட வேண்டும். மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்றினால் கண் பார்வைத் திறன் மங்காமல், பார்வைத்திறன் அதிகரிக் கும் என அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment