வைக்கம் அறப்போர் நூற்றாண்டு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

வைக்கம் அறப்போர் நூற்றாண்டு விழா!

ஏப்.1 இல் துவங்கி 603 நாள்கள் கொண்டாட முடிவுகேரள, தமிழ்நாடு இரண்டு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

வைக்கம், மார்ச் 21- வைக்கம் போராட்டத்தின்  நூற் றாண்டு துவக்க விழாவை ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை 4.30 மணிக்கு வைக்கத்தில் கேரள  முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். 

இவ்விழாவை மாநிலம் முழுவதும் கேரள கலாச்சாரத் துறையின் சார்பில்  603 நாள்கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. 

வைக்கம் அறப்போர் நடந்த 603 நாள்களை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படு கிறது. 

மாநில அளவிலான தொடக்க விழா மற்றும் நிறைவு விழா வைக்கத்தில் நடைபெறவுள்ளது. விழாவை நடத்த முதலமைச்சர் பினராயி விஜயன் தலைவராகவும், அமைச்சர் சஜி செரியன் செயல் தலைவராகவும் ஏற் பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எஸ்என்டிபி பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன், என்எஸ்எஸ் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் நாயர், கேபிஎம்எஸ் பொதுச்செயலாளர் புன்னலா சிறீகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் சாழிக் காடன், சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ஆஷா, வைக்கம் நகராட்சித் தலைவர் ராதிகா ஷியாம் துணைத் தலைவர்களாகவும், தலைமைச் செயலாளர் டாக்டர். வி.பி.ஜாய் பொது அழைப்பாளராகவும், கலாச்சாரத் துறை செயலாளர் மினி ஆண்டனி  அழைப்பாளராகவும் உள்ளனர்.

மாவட்டங்களில்  

வரவேற்புக் குழுக்கள்

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பாளராகவும் அனைத்து மாவட்டங்களிலும் வரவேற்புக் குழு அமைக்கப்படும். வைக்கத்தில் மாநில அளவிலான தொடக்க விழாவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் புரவலராகவும், அமைச்சர் வி.என்.வாசவன் தலைவ ராகவும் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட் டுள்ளது. அமைச்சர் சஜி செரியன் பொது அமைப் பாளராகவும், கலாச்சாரத் துறை செயலாளர் அமைப் பாளராகவும் உள்ளனர். வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தை அமைச்சர் வி.என்.வாசவன் துவக்கி வைத்தார். நூற்றாண்டு விழா திட்டத்தை அமைச்சர் சஜி செரியன் விளக்கினார். சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ஆஷா தலைமை வகித்தார்.


No comments:

Post a Comment