அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கைக்கணினி - கல்விச் சுற்றுலா - முழு உடல் பரிசோதனைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கைக்கணினி - கல்விச் சுற்றுலா - முழு உடல் பரிசோதனைகள்!

முதலமைச்சரின் அறிவிப்பிற்கு - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நேரில் சந்தித்து நன்றி!

சென்னை, மார்ச் 8 மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத் தில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள் தெரி வித்தார். 

முதலமைச்சர் பிறந்த நாளில் ஆசிரியர்களுக்கு அறிவித்த ரூ.255 கோடியில் கைக் கணினி, வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா, முழு உடல் பரிசோதனைகள் உள்ளிட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மனு வினை  அளித்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது

 தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளையும் , அரசு பள்ளி மாணவர்களையும் முன்னேற்ற வேறு எந்த மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தாத சிறப்பான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வரும் தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன் னேற்ற சங்கத்தினர் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 எங்களின் நியாயமான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் உணர்ந்து அத்தனையையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து எங்கள் போராட்டத்திலும், எங்கள் கடினமான சூழ்நிலை யிலும் எங்களின் ஒருவராக பங்கேற்று நம்பிக் கையை ஊட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களை கீழ்க்கண்ட எங்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து விரைவாகவும் உடனடி யாகவும் நிறைவேற்றித் தர அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துக!

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வையே சூனியமாக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உடன டியாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். 

அதிமுக ஆட்சியின் போது புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி பள்ளிக்கல்வித்துறையில் வலுக்கட்டாயமாக புகுத்திய ஆணையர் பணி யிடத்தை உடனடியாக ரத்து செய்து மீண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

ஈட்டிய விடுப்பு சரண் செய்து பணமாக பெறும் பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் களுக்கு 2004 முதல் 2006 இடைப்பட்ட கால தொகுப்பூதிய காலத்தை வரையறை செய்து அதற்கான பணப்பலனையும், பணிப்பலனையும் அளிக்க வேண்டும்.

50 சதவிகித தனி ஒதுக்கீடு...

நடுநிலைப்பள்ளிகளில் நேரடி நியமனத்தில் நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் 50 சத விகித தனி இட ஒதுக்கீடு வழங்கி அப்பணியிடத் திற்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 171 தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஊக்க ஊதிய உயர்வை பழைய நடை முறைகளை பின்பற்றி வழங்க வேண்டும்.

பணி பாதுகாப்புச் சட்டத்தை...

 ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கு இருப்பதைப் போல பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக ஏற்ற வேண்டும்.

ஆசிரியர்களின் பல்வேறு நிர்வாகம் சார்ந்த சிக்கல்களை தீர்ப்பதற்காக உடனடியாக பள்ளிக் கல்வித் துறைக்கென  தனிச்சிறப்பு நிர்வாக தீர்ப் பாயம் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். 

இந்நிகழ்வில் மாநில செயலாளர் தி.அருள் குமார், மாநில பொருளாளர் பா . உதயகுமார் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன் மாநில துணைத் தலைவர்கள் வி. மாதேஸ்வரன்,  கு.அத் தியப்பன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment