ஒரே மாதத்தில் ஒன்பது பேரை சுட்டுப் பிடித்த காவல்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

ஒரே மாதத்தில் ஒன்பது பேரை சுட்டுப் பிடித்த காவல்துறை

சென்னை, மார்ச் 13- - ரவுடிகளை ஒடுக்குவதிலும், குற்றவாளிகளை பிடிப்பதிலும் தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரே மாதத்தில் 9 ரவுடிகள் துப்பாக் கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப் பட்ட வழக்கில், பிடிபட்ட ரவுடிகளில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கவுதம், ஜோஸ்வா ஆகியோரை காவல்துறையினர் காலில் துப்பாக்கி யால் சுட்டு பிடித்தனர். திருச்சியில் பிப்ரவரி 20ஆம் தேதி காவலர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி அண்ணன் தம்பிகளான  துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட் டனர். இதனை தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை அயனாவரத்தில் ரவுடி சூர்யாவை பெண் காவல் உதவி ஆய்வாளர் கீதா துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.  அடுத்த ஒரு வாரத் தில் பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் ரவுடி வினோத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இப்படி கடந்த மாதத்தில் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 6 ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். ரவுடிகளை சுட்டு பிடிக்கும் நோக்கம் இல்லை, அவர்கள் காவல் துறையினரை தாக்குவதால் தற்காப்புக்காகத்தான் காவல் துறையினர் சுடுகின்றனர் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கூறினார். அதன்படி ரவுடிகள் வேட்டை இம்மா தமும் தொடர்கிறது. கடந்த 7ஆம் தேதி கோவையில் சஞ்சய் ராஜா என்ற கொலை வழக்கு ரவுடி தப்பி ஓட முயன்றபோது சுட்டு பிடிக்கப்பட்டார். இந்த நிலையில் 12.3.2023 அன்று தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடியில் 2 ரவுடிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு தொடர்வதால் ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர். 

No comments:

Post a Comment