கோபத்தை அடக்கினால் கல்லீரலுக்கு ஆபத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

கோபத்தை அடக்கினால் கல்லீரலுக்கு ஆபத்து!


வலதுபுற மார்பு கூட்டின் கீழ் பகுதியில் அமைந்துள்ள கல்லீரல், உடலின் மிகப் பெரிய உறுப்பு. உணவு, நீர், காற்றின் வழியே உடலுக்குள் செல்லும் நச்சுப் பொருட்களை வெளி யேற்றி, உடலை சமநிலையில் வைத் திருப்பது கல்லீரலின் பணி.

எனவே, 'டீ டாக்ஸ்சிபிகேஷன்' எனப்படும் நச்சு நீக்கம் செய்வதற்காக தனியாக எதுவும் செய்ய தேவையில்லை. அந்தப் பணியை கல்லீரலே செய்து விடும்.

கல்லீரல் ஆரோக்கிய உணவுகள்!

எலுமிச்சை சாறு - உணவுக்கு முன் குடித்தால், வயிற்றின் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தி, செரிமான சக்தியை அதிகரிக்கும். சிறந்த மூலிகைகளில் ஒன்றான பூண்டு, கொழுப்பைக் கட்டுப்படுத்த, உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க உதவும். பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட், பீட்ரூட் காய்கறிகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுவதால், கழிவு களை வெளியேற்ற உதவும். காபியில் 1,000 வகையான வேதிப் பொருட்கள் உள்ளன. இதன் பலன் அல்லது கெடு தல் குறித்து முழுமையான ஆராய்ச்சி இதுவரை இல்லை. சில ஆய்வுகள், 'தினமும் காபி குடிப்பதால், கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்; கேன் சர் வருவதைத் தடுக்கும்' என்றும், 'உடம்பில் இயல்பாகவே 'பாராக்சாந் தைன்' என்ற வேதிப் பொருள் உரு வாகும். இது, தழும்புகளை உண் டாக்கும்.

'காபியில் உள்ள 'கேபைன்' என்ற வேதிப்பொருள் செரிமானம் ஆகும் போது, தழும்புகளை வளர விடாமல் தாமதப்படுத்தும்' என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சீன மருத்துவ முறைப்படி கோபத்திற்கும், கல்லீர லுக்கும் நேரடியான தொடர்பு உள்ளது. நமக்கு ஏற்படும் கோபத்தை முறையாக, சரியான முறையில் வெளிப்படுத்தி விட வேண்டும். காரணம், கோபத்தை உள்ளேயே அடக்கி வைத்தால், அது உடம்பில் வெப்பத்தை உண்டு பண்ணும். நாளடைவில், இந்த வெப்பம் உடல் உள்ளுறுப்புகளில், குறிப்பாக கல்லீர லில் அழற்சியை ஏற்படுத்தும்.உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தால், அழற் சியை ஓரளவு தடுக்கலாம் என்றாலும், கோபத்தை சரியான விதத்தில் வெளிப் படுத்த தெரிந்தால், அது கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது தான் உண்மை.

மூளைக்கு குளூக்கோஸ் தருவதில் துவங்கி, இரும்பு சத்து உட்பட பிரதான நுண்ணூட்டச் சத்துக்களை சேமித்து வைப்பது, குருதி உற்பத்தி, நோய் தொற்றுக்கு எதிராக போராடுவது என்று 200க்கும் மேற்பட்ட பணிகளை கல்லீரல் செய்கிறது.

No comments:

Post a Comment