பெரியார் பேசுகிறார் தொடர் : 72 அறிஞர் அண்ணா நினைவு நாள் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

பெரியார் பேசுகிறார் தொடர் : 72 அறிஞர் அண்ணா நினைவு நாள் கூட்டம்

தஞ்சை, மார்ச் 8 அறிஞர் அண்ணா அவர்களின் 54ஆம் ஆண்டின் நினைவு நாள் கூட்டம் 4.2.2023 அன்று மாலை 6.30 மணிக்கு தஞ்சை கீழராச வீதியில் உள்ள பெரியார்  இல்லம், சுயமரியாதை சுடரொளி கபிலர் அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத் தொடக்கத்தில்  மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மண்டல கழக மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி ஆகியோர்  கழகப்பாடல்களைப் பாடினார் கள்.

மாநகர ப.க.அமைப்பாளர் சாமி.கலைச் செல்வன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.

நிகழ்வுக்கு, பட்டுக்கோட்டை பொறியாளர் சு.கீதப்பிரியா தலைமை வகித்து அறிஞர் அண்ணா அவர்களின் சாதனைகளையும், பெரியாரையும் - அண்ணாவையும் நாம் தொடர் வாசிக்க வேண்டும் பிறரையும் வாசிக்க வைக்க வேண்டும் அப்போது தான் நாம் சரியான கொள்கைப் பாதையில் செல்ல முடியும் என்று கூறினார்.

நிகழ்வுக்கு முன்னிலை வகித்தவர்களில், மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சந்தித்த வரலாற்று நிகழ்வை சுட்டிக்காட்டிப் பேசினார்.

பின், தஞ்சை 4-ஆவது வட்ட மாமன்ற தி.மு.க. உறுப்பினர் சுமதிஇளங்கோவன், தஞ்சை 22 ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் பொ.வீரைய்யன் சத்யா, அறிஞர் அண்ணா வின் பொன்மொழிகளைக்கூறி விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்று கூறி பொது வாழ்வின் இலக்கணம் அய்யாவும், அண்ணாவும், கலைஞரின் தொடராக உள்ள தளபதி முதல்வர் கரத்தை வலுப்படுத்த இது போன்ற கூட்டங்கள் அவசியம் என்று கூறினார்.

தொடர்ந்து,அறிஞர் அண்ணாவின் படத்தை திறந்து வைத்த,தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளரும், மேயருமான சண்.இராமநாதன் அண்ணாவின் படத்தை திறந்து வைத்ததை பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். அண்ணா வழியில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தான் தஞ்சையின் மாற்றம், நான் பதவியேற்று முதல் கையொப்பம் போட்டது, ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்து உடல் அடக்கம் செய்யும் போது எரியூட்டச் செய்யும் செலவே பெரும் தொகையாக இருந்ததை மாற்றி, உடல் இல வசமாக தகனம் செய்யப்படும் என்று உத்தரவிட்டேன். இம்முறை தமிழ் நாட்டி லேயே தஞ்சையில் தான் வேறு எங்கும் இதுவரை இல்லை. மேலும், தஞ்சை மாநகர வளர்ச்சி என்பது கடன் இல்லாத மாநகராட்சி யாக விரைவில் மாற்றம் அடையும். ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வீதிகளும் அழகுபடுத்தப்பட்டு மாபெரும் ஊர்வலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை கலந்து கொள்ள வைத்து தஞ்சை எப்போதும் தி.மு.க.கோட்டை என்பதை நிலைநாட்டுவோம் என்று கூறினார்.

தொடர்ந்து,"அண்ணாவைப் படிப் போம்"...  என்றத் தலைப்பில் கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் உரையாற்றினார்,

அவரது உரையில்...

தந்தை பெரியாரும் - அண்ணாவும், அண்ணாவின்  சாதனைகள், அண்ணாவின் எழுத்து, கடிதங்கள், நாடகம், கதை, கவிதை, கட்டுரைகள், போராட்டம், ஆட்சியின் அணுகுமுறை, இலக்கியத் திறன், தமிழ்நாடு பெயர் மாற்றம், இரு மொழித் திட்டம், சுயமரியாதைத் திருமணச் சட்டம், அயல் நாட்டுப் பயணம், போப்பாண்டவர் சந்திப்பு என்று பல வரலாற்றுத் தொடர்களைக் கூறி அண்ணாவின் வாழ்வு என்பது ஒரு வரலாற் றுப் பாடம் அதை நாம் படித்து பிறரையும் படிக்க வைக்க வேண்டும் என்று கூறி, இந்த பெரியார் பேசுகிறார்.. போன்ற நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களையும், மாணவர்களையும் சுயமரியாதை உணர்வுபெறத் தூண்டச் செய்ய வேண்டும்.

இக்கூட்டம் மேலும், மேலும் தொய்வின்றி நடத்தும் அனைத்துத் தோழர்களையும் பாராட்டுவதோடு தந்தை பெரியார் பணியைத் தொடர்வோம். அண்ணாவின் இலட்சியம் வெல்ல இந்நாளில் உறுதியேற்போம் என்று கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து, புத்தகங்கள் வழங்கி சிறப்பிக் கப்பட்டது. ஒன்றிய ப.க. அமைப்பாளர் களி மேடு அன்பழகன் நன்றி கூறினார். நிகழ்வில் மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனி வேல், மாநில கலைத் துறைச் செயலாளர் தெற்குநத்தம் சித்தார்த்தன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் ந.சங்கர், மாநகர கழகத் தலைவர் பா.நரேந்திரன், அமைப்பாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன், மாநகர ப.க.தலைவர் பொறியாளர் ப.மனோகரன், மாநகர செயலாளர் மா.இலக்குமணசாமி, ரா.வீரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment