தேனி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

தேனி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடை


2022ஆம் ஆண்டு பெரியார் 1000 வினா-விடை போட்டியில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த அரசு உயர்நிலைப்பள்ளி சண்முக சுந்தராபுரம் ஆண்டிப்பட்டி தேனி மாவட்டம் முதல் பரிசு: ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என பரிசு தொகையான ரூ.10,000த்தை வழங்கியவர்கள் மனிதநேயர் ஆ.தாஸ் குடும்பத்தினர் (தேனி) சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்  திமுக செயல் வீரர்  இரா. மகேஷ் மற்றும் இரா. ஆண்டிச்சாமி ஆகியோர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டிப்பட்டி தேனி மாவட்டம். பெரியார் 1000 தேர்வில் மதிப்பெண் எடுத்த அய்ந்து மாணவிகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2,500 தேனி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசனின் தாயார் பழனியம்மாள் - தந்தை சாமிக்கண்ணு ஆகியோர் நினைவாக வழங்கப்பட்டது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டிப்பட்டி தேனி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடை தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்று மெடல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment