சமூக நீதியைச் சூறையாடுகின்றது ஒன்றியத்திலுள்ள மோடி ஆட்சி! ''கண்காணிப்புக் குழு'' அமைத்து பாதுகாக்கின்றது திராவிட மாடல் ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

சமூக நீதியைச் சூறையாடுகின்றது ஒன்றியத்திலுள்ள மோடி ஆட்சி! ''கண்காணிப்புக் குழு'' அமைத்து பாதுகாக்கின்றது திராவிட மாடல் ஆட்சி!

மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

சென்னை.பிப்.14 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத்தின் முதல் கட்டம் பிப்ரவரி 10 இல் முடிவடைந் திருந்து, இரண்டு நாள் இடைவெளியில் இரண்டாம் கட்டமாக மயிலாப்பூர், புரசைவாக்கத்தில் நேற்று (13.2.2023) தொடங்கியது. 

இரண்டாம் கட்டத்தின் முதல் கூட்டம்!

மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் நடைபெற்ற ''திராவிட மாடல்'' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்தில் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்று பேசி னார்.  மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன், மாவட்ட துணை செயலாளர்கள் ராகவன், தாமோதரன், மாவட்ட அமைப்பாளர் மதியழகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வி.சி.க. துணைப் பொதுச் செய லாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி,திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி ஆகியோர் உரையாற்றிய பின்னர் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

டாக்டர் சி. நடேசனார் வாழ்ந்த பகுதி!

தொடக்கத்தில், “அம்பேத்கர் பாலத்தின் அருகில் நீண்ட நாள் கழித்து பேசுகிறேன் என்றார். ”இந்தப் பகுதிதான் திராவிடன் இல்லம் நடத்திய திராவிட இயக்கத்தின் முன்னோடி டாக்டர் சி. நடேசன் வாழ்ந்த பகுதி என்ற பெருமையைப் பெற்றது” என்றார். தொடர்ந்து சுற்றுப்பயணத்தின் நோக்கத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, ”நூறாண்டுகளுக்கு முன்பு திராவிடர் இயக்கம் தோன்றி, படிக்காதே என்று சொன்ன பார்ப் பனியத்தை மட்டம் தட்டி, அமைதிப்புரட்சியாக; அறிவுப் புரட்சியாக மக்களின் கல்வியில் கவனம் செலுத்தியால், இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் ஏராளமாக படித்திருக் கிறார்கள்.  அந்த இளைஞர்களுக்கு பெரிய வாக்குறுதி களை ஒன்றிய அரசு தந்திருந்தும் கூட, நடை முறைப்படுத்த தவறி விட்ட காரணத்தால், தமிழ்நாடு அரசு சேது சமுத்திர திட்டத்தை மறுபடியும் கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு இளைஞர்களுக்கு ஏராள மான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்று கூறிவிட்டு, இது தனி கூட்டம் அல்ல. அதனால் விரிவாக பேச வாய்ப்பில்லை. ஆகவே சேது சமுத்திரத் திட்டம் பற்றி கலைஞர், டி.ஆர்.பாலு, தான் (ஆசிரியர்) எழுதிய மூன்று புத்தகங்களை எடுத்து மக்களுக்கு காட்டி, அதை வாங்கிப் படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனை!

மேலும் அவர், திராவிடர் கழகம் பெரியார் இருந்த போது நடந்த முதல் சட்ட திருத்தம், பின்னர் நடந்த 76 ஆவது சட்டத்திருத்தம், 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாத்து அட்டவணை 9 இல் சேர்த்தது, மண்டல் கமிசன் என்று சமூக நீதியில் செய்துள்ள சாதனைகள் பற்றி குறிப்பிட்டார். ”படிக்காதே என்று சொன்னது இந்து மதம் என்ற பார்ப்பன மதம். ஆனால் படி படி படி என்று ஓயாமல் சொன்னதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனை!” என்று சொன்னார். தொடர்ந்து, 1899 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று சென்னை ஒற்றைவாடை திரையரங்கில் நடைபெற்ற ஒரு முக்கியமான வரலாற்றுக் குறிப்பை படித்துக் காட்டினார். அதில் காசு கொடுத்தாலும் பஞ்சமர்கள் உள்ளே போக முடியாது என்றிருந்த ஜாதிக் கொடுமையைச் சொல்லி, இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆசிவிட்டதையும் சொல்லி, “இந்த மாற்றத்திற்குக் காரணம் திராவிடர் ஆட்சி! அதன் தொடர்ச்சி தான் இந்திய ஒன்றியத்தின் முதல்வர்களில் முதல் இடத்தைப் பிடித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று அழுத்தந்திருத்தமாக சொன்னதும், மக்கள் பலமாக கைதட்டி அந்தக் கருத்தை ஆதரித்தனர். 

சூறையாடப்படும் சமூக நீதி!

தொடர்ந்து, இப்போதுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு சமூகநீதியை சூறையாடுகிறது என்பதை அரிய வகை ஏழைகளுக்கு 10% அரசியல் சட்டவிரோதமாக கொடுத் திருப்பதை எடுத்துச் சொன்னார். அதே போல, சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். மூடநம்பிக்கையை காரணம் காட்டி, உச்சநீதிமன்றம்மூலம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அந்தத் திட்டம், பா.ஜ.க. கட்சியை சேர்ந்த ஜிதேந்திர சிங் என்பவரே, ”அது ராமன் பாலம் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை” என்று சொல்லிவிட்டதை எடுத்துரைத்து, “இதைத்தானே நாங்கள் அன்றிலிருந்து சொல்கிறோம். இறுதியில் சிரிப்பது யார்? அதுதான் முக்கியம் என்றார். மக்கள் கருத்தை உருவாக்கினால், 2024 லிலும் ஒரு அமைதிப் புரட்சி வரும்.என்றுரைத்து, வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று கூறி முடித்துக் கொண்டார். பரப்புரை பாடலான “தோழா முன்னேறு! வீர மணியோடு!” பாடலின் இசையமைப்பாளர் விஜய், மேடைக்கு அழைக்கப் பட்டு பாராட்டப்பட்டார்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

இந்த பரப்புரை கூட் டத்தில் மண்டல தலைவர் இரத்தினசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், மண்டல இளைஞரணி அமைப் பாளர் வழக்குரைஞர் சண் முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிதுரை, அமைப்பு செயலாளர் பன்னீர்செல் வம், பெரியார் அறக் கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, பொறி யியல் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் தங்கமணி, மண்டல செய லாளர் தே.செ.கோபால், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத் திரன், வி.சி.க. பொறுப் பாளர்கள் ரூதர் கார்த்திக், பகலவன், திமுக வட்டச் செயலாளர்கள் தாஸ், வெற்றி, தவநேசன் திமுக வட்ட அவைத்தலைவர் அழகேந்திரன்,திமுக வட்டத்துணை செயலாளர்கள் பட்டு பிரகாஷ் சி இ மதிவாணன் கே.கலையரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் சேதுராமன் நன்றி கூறினார்.

புரசைவாக்கம்

இரண்டாம் கட்டத்தின் முதல் கூட்டம் முடிந்து, அடுத்த கூட்டமான புரசைவாக்கம் நோக்கி பரப்புரைப் படை புறப்பட்டது. புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்ற திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டி யன் அனைவரையும் வரவேற்று பேசினார். அமைப்பு செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ.கோபால், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்ட துணை தலைவர் கி.இராமலிங்கம், வழக்குரைஞர் 

துரை.அருண், மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், கொடுங் கையூர் பகுதி செயலாளர் தங்கமணி, மாவட்ட துணை அமைப்பாளர் பாஸ்கர், பகுதி தலைவர் மங்களபுரம் பாஸ்கர், கண்ணதாசன் நகர் பகுதி தலைவர் ஜீவா, புரசை பகுதி செயலாளர் சேகர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையாற்றிட திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க வுரையாற்றினார். சி.பி.அய்.மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், ம.தி.மு.க.தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்து இந்தப் பயணம் வெற்றி பெற வாழ்த்திப் பேசினர்.

சமூக நீதிக்கு தமிழ்நாடு வழிகாட்டும்!

இறுதியில் ஆசிரியர் பேசினார். முன்னால் பேசிய வர்கள் தனது 90 வயதைக் குறித்து பேசியதை சுட்டிக் காட்டி, “ எவ்வளவு காலத்திற்கு வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல! வாழும் போது எதைச் சாதித்தோம்! என்பதுதான் முக்கியம். நான் நலமாக இருக்கிறேனோ? இல்லையோ? தமிழ்நாடு நலமாக இருக்க வேண்டும்!” என்று கூறி தொடக்கத்திலேயே பார்வையாளர்களையும், மேடையில் இருப்போரையும் வசீகரித்தார். மேலும் அவர், ”சமூக நீதிக்கு இந்த மண்தான் வழிகாட்டக்கூடியது” என்று சோல்லி, ஆந்திர மாநிலம் குண்டூரில் முதன் முறையாக பி.பி. மண்டல் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையை தான் திறந்து வைத்ததாகவும், அப்போது இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த சமூகநீதி பற்றாளர்கள் தமிழ்நாடு சமூக நீதியில் சிறந்து விளங்குவது பற்றி வியப்புடன் தன்னுடன் பேசியதை எடுத்துரைத்தார். மேலும், தனக்கு முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர் பேசியதை நினைவு கூர்ந்து, ”கண்ணியமிக்க காயிதே மில்லத் தொடங்கி இன்றைய தலைவர் காதர் மொய்தீன்பாய் வரையிலும் சமூக நீதியில் நம்முடன் சேர்ந்தே பயணிப்பவர்கள்” என்றார். அத்தோடு தோழர் தா.பாண்டியனையும் நினைவு கூர்ந்தார். ஏன் இந்த இணைப்பு என்று சொல்ல வந்தவர், “இது அரசியல்  கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி!” என்றார். ”நமது எதிரிகள் சனாதனம் பேசினர். நாம் சமதர்மம் பேசுகிறோம்” என்றார்.

நால்வர்ணம் என்பது படியில்லாத மாடி!

திராவிடர் கழகம் சமூக நீதிக் களத்தில் செய்த சாதனைகளைப் பற்றிச் சொல்லிவிட்டு, “இதை எண்ணி நாம் மகிழ்ந்து தூங்கிக்கொண்டிருக்க முடியாது. காரணம் இங்கே சம்பளம் வாங்கிக்கொண்டு சனாதனத்தை குத் தகைக்கு எடுத்தவர் ராஜ்பவனில் உட்கார்ந்திருக்கிறார்” என்று எச்சரித்தார். சனாதனம் என்பதுதான் வர்ணா ஸ்ரமம்! வர்ணாஸ்ரமம்தான் நால் வர்ணம்! அந்த நால்வர்ணம் என்பது படியில்லாத மாடிகள்” என்று அம்பேத்கர் சொன்னதைக் குறிப்பிட்டு, சனாதனத்திற்கு துல்லியமான இலக்கணத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்தார். அவர் தனது உரையில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், சேது சமுத்திரத் திட்டம் என்று எதைப்பேசினாலும் அதை ஆரிய, திராவிடப் போர் என்று கருத்தமையப் பேசினார். தொடர்ந்து,  நாடாளுமன்றத்தில் 20 மசோத்தாக்கள் பற்றி கவிஞர் கனிமொழி கேள்வி கேட்டதையும், ஆளுநர் பதில் சொல்லாமல் அண்ணாமலை பதில் சொல்வதையும், அதிலும் ஆளுநர் தான் எடுத்துக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியை மீறியிருக்கும் ஆபத்தையும் சுட்டிக்காடினார்.

சமதர்மத்திற்கு எதிரானது சனாதனம்!

தொடர்ந்து, சனாதனம் என்றால் என்ன என்பதை, இந்து பனாரஸ் கல்லூரியில் நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பாடப்புத்தகத்தில் இருந்தே படித்துக் காட்டினார். அதை மொழிப்பெயர்த்ததும் நாராயண அய்யர் என்பதை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட சனாதனம் சமதர்மத்திற்கு எதிரானராது. சமதர்மம் என்றால் அனைவருக்கும் அனைத்தும்! சனாதனம் என்றால் இன்னாருக்கு இன்னது! என்பதையும் சொல்லி சனாதனம் பற்றிய மக்களுக்கு முழு புரிதலை ஏற்படுத் தினார். சமூக நீதிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுக்காட்டி, அதற்காகத்தான் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி கண்காணிப்புக்குழு என்றொரு குழுவை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் அமைத்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஒரு பக்கம் 10% இடஒதுக்கீட்டை ஆரிய வகை ஏழைகளுக்கு வழங்கி சமூகநீதிக்கு குழிவெட்டியிருக்கும் ஒன்றிய அரசையும், அதற்கு நேர்மாறான தமிழ்நாடு அரசையும் ஒப்பிட்டுக் காட்டினார். வழமை போல சேது சமுத்திரக் கால்வாயின் முக்கியத்துவம், அதன் பின் னணி, இன்றைய அதன் நிலை! அனைத்தையும் சொல்லி, “அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பி.ஜே.பி. யைச் சேர்ந்தவர்களுக்கும்,  ஆர்.எஸ்.எஸ்.கார்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆகவே இது பெரும் பான்மை மக்கள் கருத்தாக மாறவேண்டும். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று கூறி முடித்துக் கொண்டார்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,  வழக்குரைஞர் சு.குமாரதேவன்,   மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை, தி.மு.க.பொறுப்பாளர் யுவராஜ், இ.யூ.மு.லீக் பொறுப்பாளர் அன்சாரி மதார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ் நன்றி கூறினார்.

 

No comments:

Post a Comment