உடன்கட்டைக்கு புகழ்பாடுகிறார் பாஜக எம்.பி. - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

உடன்கட்டைக்கு புகழ்பாடுகிறார் பாஜக எம்.பி. - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி, பிப்.9 உடன்கட்டை ஏறும் நிகழ்வை பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் சந்திரபிரகாஷ் ஜோஷி புகழ் பாடுகிறார் என்று எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் மக்களவையில் குற்றம்சாட்டினர்.

 குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற தீர்மானத் தின் மீது ராஜஸ்தான் மாநிலம் சித் தோர்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரபிர காஷ் ஜோஷி பேசினார். அவர் பேசும் போது, ‘‘மேவார் ராணி பத்மாவதி, தன்னை அலாவுதீன் கில்ஜியிடமிருந்து காத்துக் கொள்ள, சித்தோர்கர் கோட்டை யில் உடன்கட்டை ஏறினார். தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றவும், சித் தோர்கர் புகழைக் காக்கவும் அவர் தீக்குளித்தார்’’ என்றார்.

அப்போது இதற்கு எதிர்க்கட்சி உறுப் பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கணவன் இறந்தபிறகு உடன்கட்டை ஏறும் சதி என்னும் கொடிய சம்பிரதாயம் நமதுநாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் உடன்கட்டை ஏறும் நிகழ்ச்சி குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்  புகழ்பாடுகிறார் என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் 

கே. முரளீதரன், ஏஅய்எம்அய்எம் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

ஆனால் உடன்கட்டை குறித்து நான் புகழ்பாடவில்லை என்று சந்திரபிரகாஷ் ஜோஷி மறுத்தார். இதையடுத்து மீண் டும் அவையில் பேசி ஜோஷி, தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே ராணி பத்மாவதி தீக்குளித்தார் என்று நான் கூறினேன் என்றார்.

இதைத் தொடர்ந்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எதிர்ப்பு தெரிவிக்கவே மக்களவையை, மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா நண்பகல் வரை ஒத்திவைத்தார். பகல் ஒரு மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி நீடிக்கவே அவையை ஓம் பிர்லா மீண்டும் ஒத்திவைத்தார். 


No comments:

Post a Comment