சமூக ஊடகங்களிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 20, 2023

சமூக ஊடகங்களிலிருந்து...

 "எய்ம்ஸ் ஆண்கள் விடுதி சார்! பாருங்க சார் மேப்புல கூட இருக்கு!”

“வட்டக் கிணறு சார்... வட்டக் கிணறு! வத்தாத கிணறு! 80 அடி ஆழத்துல இருந்துச்சு. இங்க தான் சார் படிக்கட்டு இருந்துச்சு... இங்கதான் பம்புசெட் இருந்துச்சு!” என்று வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்று பார்த்திருக்கிறீர்களா? ஒரு தரிசு நிலத்தைச் சுற்றிக்காட்டி “இந்தப் பக்கம் 500 தென்னை, இந்தப் பக்கம் 500 வாழை, அந்தப் பக்கம் 500 கொய்யா சார்”  என்று விளக்கி போலீசையே கிறுகிறுக்கச் செய்வார்.

அப்படித்தான் இருக்கிறது மதுரை ஒற்றைச் செங்கல் எய்ம்ஸ் கதையும்! அடிக்கல் நாட்டியதுடன், மோடி மட்டுமல்ல, ஒன்றிய அரசும் மறந்துபோய்விட்ட எய்ம்சை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றங்களிலும் நினைவூட்டினாலும், இன்றும் அதே நிலை தான் தொடர்கிறது. ஆனால், கூகிள் மேப்ஸ்(Google Maps) 

செயலியில், 'இதுதான் எய்ம்ஸ்', 'இது தான் எய்ம்ஸ் ஆண்கள் விடுதி', 'இது தான் எய்ம்ஸ் இயக்குநர் அலுவலகம்' என்று அந்தந்தப் பகுதியைக் குறித்து வைத்திருக்கிறார்களாம். ஒன்றிய அரசைப் பார்த்துச் சிரிப்பாய்ச் சிரித்துக் கிடக்குது சமூக ஊடகம்! 5 ஆண்டுகளாக தங்கள் முகத்தில் அப்பியிருக்கும் அழுக்கைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்தவர்களை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க. சங்கிகள்!

-  அறிவன் முகநூல் பதிவு



No comments:

Post a Comment