உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இணையத்தில் அறியலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இணையத்தில் அறியலாம்

புதுடில்லி, பிப்.24 இணையத்தில் தீர்ப்பு விவரங்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க ஒவ்வொரு தீர்ப்புக்கும் தனித்துவ எண் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தில் தினசரி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்புகள் நீதிபதிகள் கையெழுத்திட்ட உடன் இணையதளத்தில் பதிவேற் றம் செய்யப்படுகிறது. வழக்குஎண், நீதிபதியின் பெயர், தீர்ப்புவெளியான நாள், வாதி, பிரதிவாதியின் பெயர் ஆகியவற்றை இணையத்தில் பதி விட்டு குறிப்பிட்ட தீர்ப்பு விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த சூழலில் இணையத்தில் தீர்ப்பை எளிதாக அறிய கூடுதலாக ஒரு வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்   கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளுக்கும் தனித் துவ எண்வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்கடந்த ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான தீர்ப்புகளுக்கு தனித்துவ எண்வழங்கப்பட உள்ளது. இதன்படி 30,000 தீர்ப்புகளுக்கு பிரத்யேக எண் அளிக்கப்படும்.இரண்டாம் கட்டமாக 1995-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை வரையிலான தீர்ப்புகளுக்கும் மூன்றாம் கட்டமாக 1950-ஆம் ஆண்டுமுதல் 1994-ஆம் ஆண்டு வரையிலான தீர்ப்புகளுக்கும் தனித் துவ எண்கள் வழங்கப்படும். பிராந்தியமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தீர்ப்புகளை சரிபார்க்க நீதிபதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமைநீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment