முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, பிப். 5- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசா ணையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

சமூக நலத் துறை சார்பில், முதல்-அமைச்சரின் பெண் குழந் தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதிநிறுவ னத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதிக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், ஒன்றிய அர சின் விதிகள் படி, திட்டப் பயனாளிகளின் ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது. இந்தத் திட்டத் தின் கீழ் வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதாருக்கு பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக் கொண்டு திட்டத்தின் கீழ் பயன் பெற விண் ணப்பிக்க வேண்டும். ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆதார் விண்ணப் பித்த போது வழங்கப்படும் ஆவ ணம் அல்லது ஆதார் பெறுவதற் கான விண்ணப்ப நகல் இணைக்க வேண்டும். 

அத்துடன், ஒளிப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, ஒளிப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்புக் கணக்குப் புத் தகம், ஓட்டுநர் உரிமம், வட்டாட்சி யர் நிலையிலான அதிகாரியால் சான்றொப்பம் வழங்கப்பட்ட ஒளிப் படத்துடன் கூடிய சான்றிதழ் அல் லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற் றில் ஏதேனும் ஒன்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment