ஊற்றங்கரை: “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்'' விளக்க சுற்றுப்பயண பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்கானஆலோசனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 10, 2023

ஊற்றங்கரை: “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்'' விளக்க சுற்றுப்பயண பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்கானஆலோசனைக் கூட்டம்

ஊற்றங்கரை, பிப்.10 “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க பரப்புரை பயணத்தில் பிப்ரவரி 18 அன்று ஊற்றங்கரை வருகை தரும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்க திமுக மற்றும் தோழமை அமைப்புக்கள் முடிவு!

“சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க பரப்புரை பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிஞர் அண்ணா நினைவு நாளாம் பிப்ரவரி 3 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி கடலூர் நகரில் நிறைவடைய இருக்கும்  பயணத் தில் வருகின்ற பிப்.18 ஆம் நாள்  சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை நகருக்கு வருகை தந்து சிறப்புரை யாற்ற இருப்பதை ஒட்டி 24.01.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் திராவிடர் கழக கலந்துரையாடல்  மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் .கி.வீரமணி அவர்களை குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது.  தருமபுரி மண்டல திராவிடர் கழக செயலாளர் பழ.பிரபு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்ற பின்னர் “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க சுற்றுப்பயணம் குறித்த அறிமுக உரையை திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்  நிகழ்த்தினார்.

ஊற்றங்கரை நகரில் நடைபெறவிருக்கும்  “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்'' விளக்க சுற்றுப்பயண  பொதுக் கூட்ட ஏற்பாடுகளுக்கான திட்டமிடல்கள் குறித்து மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்கள் உரை யாற்றி ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் ஊற்றங் கரை நகருக்கு வருகை தரும்போது எழுச்சிகரமான வர வேற்பை அளித்திட வேண்டும் என்கிற நோக்கத்தை வலி யுறுத்தி  சொற்பொழிவாளர் பழ.வெங்கடாசலம் கூட்ட நோக்க உரையை நிகழ்த்தினார்

நன்கொடை

ஊற்றங்கரை பேரூராட்சி மன்ற உறுப்பினரும் திமுக நகர பொறுப்பாளருமான கவிதா குப்புசாமி - குப்புசாமி வாழ் விணையர்கள் சார்பில் ஊற்றங்கரை நகரில் நடைபெற விருக்கும்  “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்'' விளக்க சுற்றுப்பயண  பொதுக்கூட்ட நிகழ்விற்காக அய்ந்தாயிரம் ரூபாய் நன்கொடையை திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் அவர்களிடம் வழங்கினார்.

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவரும் ,திமுக மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளருமான தணிகை.ஜி.கருணாநிதி அவர்கள் தமிழர் தலைவர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க சுற்றுப்பயண  பொதுக்கூட்ட நிகழ்விற்காக ரூ.20,000 வழங்கு வதாக பலத்த கரவொலிகளுக்கு இடையே அறிவித்தார்

தி.மு.க.வே முன்னின்று செய்யும்!

திமுக இளைஞரணி பொறுப்பாளர் குப்புராஜ், ஊற்றங் கரை பேரூர் கழக திமுக  அவைத்தலைவர் தணிகைகுமரன் , ஊற்றங்கரை பேரூராட்சி துணைத்தலைவர் கலைமகள் தீபக் (எ) பார்தீபன், ஊற்றங்கரை நகர திமுக செயலாளர் இர.பாபு சிவக்குமார், ஊற்றங்கரை பேரூராட்சி தலைவர் பா.அமா னுல்லா , ஊற்றங்கரை ஒன்றிய தெற்கு மற்றும் மத்திமம் ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் த.செல்வம் ,ரஜினி செல்வம் உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் உரையாற்றி “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்'' விளக்க சுற்றுப்பயணத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திமுகவே முன்னின்று செய்யும் என்ற உறுதிமொழியை பலத்த கரவொலிகளுக்கு இடையே அறிவித்தனர். ஊற்றங்கரை திமுக பொறுப்பாளர்களின் இந்த அறிவிப்பிற்கு திராவிடர் கழகம் மற்றும் தோழமை அமைப்புக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விடுதலை வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் 

ந.இராசேந்திரன்  உரையாற்றிட திராவிடர் கழகத் தலைவர், 'விடுதலை'யின் ஆசிரியர் தமிழர் தலைவர்  கி.வீரமணி அவர்கள் இனி எப்போது ஊற்றங்கரை நகருக்கு வருகை தந்தாலும் அவருக்கான பயண செலவினை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஏற்றுக்கொள்ளும் என்று விடுதலை வாசகர் வட்ட தலைவர் மற்றும் பொருளாளர் ஒப்புதலோடு விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு அறிவித்தார்.

1000 துண்டறிக்கைகள்

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் தோழர் லெனின் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வே.குபேந்திரன் ஆகி யோர் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலர் சா .அசோகன்  “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க சுற்றுப்பயணத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்து  1000 துண்டறிக்கைகள் தமது நன்கொடை யாக வழங்குவதுடன்  ரூ.10,000 விடுதலை சந்தா தொகையை அளிப்பதாக மகிழ்வுடன் அறிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட துணை தலைவர்  வண்டி.ஆறுமுகம் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிமுத்து.இராஜேசன் ,காவேரிப்பட்டினம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் வேடியப்பன், பருகூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரகுநாதன்,  வழக்குரைஞர் ஜெயசீலன் , ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர்கள்.

கோ. சரவணன், விக்னேஷ் , சிவகுமார் ,காரப்பட்டு அருண்குமார் ஜி.அஜீத், சி..தினேஷ் ,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சித.அருள், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இராம.சகாதேவன்  ஒன்றிய திராவிடர் கழக  தலைவர் செ.பொன்முடி ,ஒன்றிய செயலர் செ.சிவராஜ்,  ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொறுப்பாளர்கள் இராமசாமி, சீரங்கன்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

நிறைவாக கிருஷ்ணகிரி  மாவட்ட திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம் , கிருஷ்ணகிரி  மாவட்ட திராவிடர் கழக தலைவர் த.அறிவரசன் ஆகியோர் வழி காட்டல் உரையை வழங்கி நிகழ்வை சிறப்பாக நடத்திட ஆலோசனை வழங்கி சிறப்பித்தனர்.

தீர்மானங்கள்

திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானம் எண் : 1  

நன்றி தெரிவிக்கும் 

தீர்மானம்

தீர்வானத்தை வாசித்தவர்: சீனிமுத்து இராஜேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

இறுதி மூச்சு உள்ளவரை தந்தை பெரியார் பணியே தமது பணி என்கிற உணர்வோடு தமது 90 ஆம் வயதில் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளில் வாழும் தமிழர்களிடம்  தொடர் பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இக் கூட்டம் தமது  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. சமூகநீதி - திராவிட மாடல் பாதுகாப்பு என்கிற நோக்கத்தில் வருகை தரும் திராவிடர்  கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் .கி.வீரமணி அவர்களின் பரப்புரை  பயணம் வெற்றிகரமாக நடந்திட இக் கூட்டம் நன்றியுணர்ச்சியுடன் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் : 2  

ஊற்றங்கரையில் “சமூகநீதி பாதுகாப்பு - 

திராவிட மாடல்“ விளக்கப் பயணத்திற்கு எழுச்சிகரமான வரவேற்பு அளித்தல்

தீர்மானத்தை வாசித்தவர் : கோ.சரவணன், ஒன்றிய  இளைஞரணி தலைவர் 

வருகின்ற பிப்.18 ஆம் நாள்  சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை நகருக்கு வருகை தரும் “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க பரப்புரைப் பயணத் திற்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிப்பதுடன் பரப்புரைப் பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற வருகை தரும் திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கி

அனைத்து தோழமை அமைப்புகளையும் இணைத்து வரலாற்று சிறப்புமிக்க விழாவாக நடத்திட இக் கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் எண் : 3  

 “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்'' விளக்க பரப்புரை பயணத்திற்கு நிதி அள்ளித் தருக!''

தீர்மானத்தை வாசித்தவர்: செ.சிவராஜ்,  ஒன்றிய  செயலாளர்

வருகின்ற பிப்.18 ஆம் நாள்  சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை நகருக்கு வருகை தரும் “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திட நிதி அள்ளி வழங்க வேண்டியது நன்றியுணர்ச்சியுள்ள ஒவ்வொரு தமி ழரின் கடமய்யாகும் ,ஊற்றங்கரை நகரில் உள்ள அனைத்து கட்சி பெருமக்கள், வணிக பெருமக்கள், இளைஞர்கள், மாண வர்கள், கல்வியாளர்கள் என அனைவரையும் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிதி அள்ளி வழங்கி உதவிட வேண்டுமாய் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் எண் : 4   

விழாக் குழு அமைத்தல்

“சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க பரப் புரைப் பயண பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைத்து  தோழமை அமைப்புக்களையும் உள்ளடக்கி விழாக் குழு அமைப்பது எனவும், ஒவ்வொருவருக்கும் அளித்திடும் பொறுப்புகளை செவ்வனே செய்து நிகழ்வை வெற்றிகரமாக  நடத்திடுவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

அனைத்து தீர்மானங்களும் ஒரு  மனதாக நிறைவேற்றப் பட்டது. வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு  திராவிடர் கழகம் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment