ஹிண்டன்பர்க் அறிக்கை - உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 20, 2023

ஹிண்டன்பர்க் அறிக்கை - உச்சநீதிமன்றம் உத்தரவு



புதுடில்லி, பிப். 20- அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அதானி குழுமம் மீதான அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பரிந்துரைத்த நிபுணர் குழுவை நியமித்தால் அந்த குழு அரசு நியமித்தத்தாகவே கருதப்பட நேரிடும். அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட  வேண்டுமெனில் உச்சநீதி மன்றமே நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார். நிபுணர்களின் பெயர்களை ஒன்றிய அரசு மூடி முத்திரை வைத்த கவரில் வழங்கினால் நாங்கள் ஏற்க மாட்டோம் என கூறினார். மேலும் அரசு பரிந்துரைத்த நிபுணர் குழுவைந நியமித்தால் அந்த குழு அரசு நியமித்ததாகவே கருதப்பட நேரிடும் என்று நீதிபதி தெரிவித்தார். அதானி - ஹிண்டென்பர்க் அறிக்கை குறித்த விவகா ரத்தில் குழு அமைப்பது தொடர்பாக உத்தரவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது .

No comments:

Post a Comment