ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புக்கு இடம் எங்கே? : ராகுல் காந்தி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 2, 2023

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புக்கு இடம் எங்கே? : ராகுல் காந்தி கேள்வி

புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நாட்களை ஒன்றிய அரசு அமிர்த காலம் என அழைத்து வருகிறது. அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் நிதிநிலை அறிக்கை நாட்டை வளர்ந்த நாடாக்குவதற்கு அடித்தளமிட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் ஒன்றிய அரசு தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதால், இந்த காலத்தை 'நண்பர்கள் காலம்' என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அந்த வகையில் இந்த பட்ஜெட்டை 'நண்பர்கள் கால நிதிநிலை அறிக்கை' என அவர் குறைகூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:- நண்பர்கள் கால நிதிநிலை அறிக்கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட் டமில்லை. விலைவாசியை கட்டுப் படுத்த திட்டமில்லை. சமத்துவமின் மையைத் தடுக்கும் நோக்கம் இல்லை. 1 சதவீத பணக்காரர்களுக்கு 40 சதவீத செல்வம் உள்ளது. 50 சதவீத ஏழைகள் ஊதியத்தின் 64 சதவீதத்தை ஜி.எஸ்.டி. யாக செலுத்துகிறார்கள். 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள் ளனர். இருந்தாலும் பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. இந்தியாவின் எதிர் காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கை நிரூபிக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment