வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி : 4,430 இடங்கள் ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி : 4,430 இடங்கள் ஒதுக்கீடு

சென்னை பிப்.24 வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டில் நிகழாண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின் றனர். அவ்வாறு பயிற்சிபெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவஆணையம் அறிவித்துள் ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப் பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல் லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் நிக ழாண்டில் உள்ளுறை பயிற்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. அனுமதிக் கப்பட்ட கல்லூரிகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட் டவை என்பதால் அங்கு உள்ளுறை பயிற்சி மேற்கொள்ளும் அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாண வர்கள் யாரும் இருக்க மாட் டார்கள். எனவே, அவர்களுக்கான இடங்களும் நிகழாண்டில் வெளி நாட்டில் மருத்துவம் பயின்றவர் களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment