பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி நிறைவு விழா

வல்லம், பிப். 9- இந்திய பாரா கைப்பந்து சங்கம், தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி நிறைவு விழா 5.2.2023 அன்று பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. 

தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநில தலைவர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் வரவேற்புரை வழங்கினார். 

இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கருநாடகா, தெலங்கானா, ஆந்திரா உத்ரகாண்ட், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட 15 மாநிலங் களிலிருந்து 15 ஆண்கள் அணிகளும் 9 பெண்கள் அணிகளும் என மொத்தம் 24 அணிகளை சார்ந்த சுமார் 220 ஆண் களும் 130 பெண்களுமாக மொத்தம் 350 விளையாட்டு வீரர்கள், வீராங்க னைகள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் மாநில தலைவர் தமிழ்நாடு பாரா வாலிபால் அசோசியேசன் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் வரவேற்புரை ஆற்றினார்.  மேலும் இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தடகள சங்கத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராம நாதன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலளார் சங்கீதா, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் பேரா. பு.கு.சிறீவித்யா, மேனாள் செயலாளர் ஜெ.சந்திரசேகர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டோனியல்,  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடற்கல்வி இயக்குநர் பேரா.ரமேஷ், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ராஜா, ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற அகில இந்திய பாரா கைப்பந்து வீரர், வீராங் கனைகளை பாராட்டி அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினர். 

தலைமை வகித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உரையாற்றும் போது, மாற்றுத் திறானாளிகளின் திறன் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் இப்போட்டி நடைபெற்றது என்றும்  மேலும் அவர்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வாழ்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங் கினார். 

ஆண்கள் பிரிவில் முதலிடத்தினை கருநாடக அணியும், இரண்டாம் இடத் தினை தமிழ்நாடும், மூன்றாம் இடத்தினை அரியானா மற்றும் ராஜஸ்தான் அணியும் - பெண்கள் பரிவில் முதலிடத்தினை ராஜஸ்தானும் அணியும், இரண்டாம் இடத்தினை கருநாடக அணியும், மூன்றாம் இடத்தினை தமிழ்நாடும்  மற்றும் அரியானாவும் பெற்றன. 

மேலும் இந்நிகழ்வில் இப்போட் டியை நடத்துவற்கு ஒத்துழைப்பு கொடுத்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாம்பே சுவீட்ஸ் குழுமத் தலைவர்  சுப்பிரமணிசர்மா, செஞ்சிலுவை சங்கத் துணைத் தலைவர் முத்துக்குமார், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் தன்னார்வ தொண்டு மாணவர்கள்  மற்றும் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டினார். 

இறுதியாக நன்றியுரையை தஞ்சாவூர் மாவட்ட தலைவர் பாரா வாலிபால் அசோசியேசன் கி.ராமநாதன் துளசி வாண்டையார் நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment