தமிழ், தமிழ்நாடு, திராவிடம் - தமிழர்களின் Icons - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

தமிழ், தமிழ்நாடு, திராவிடம் - தமிழர்களின் Icons

இரண்டு பெயர் மாற்றங்கள் நம் இன எதிரிகளை தொடர்ந்து மிரட்சியடைய வைத்துக் கொண்டு வருகின்றன. ஒன்று இயக்கத்தின் பெயர்மாற்றம். மற்றொன்று நமது மாநிலத்தின் பெயர் மாற்றம். 1916இல் தொடங்கப்பட்ட பிரமணரல்லாதார் சங்கம் பின் South Indian Liberal Federation  (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) என்றாகியது. அந்த கட்சி மூன்று பத்திரிகைகளை நடத்தியது. தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகா சிகா மற்றும் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ். ஆங்கில பத்திரிகையின் பெயரே கட்சி யின் பெயராக நிலைத்தது. ஜஸ்டிஸ் கட்சியின் தலைமை தந்தை பெரியாரிடம் வந்ததும், 1944இல் சு.ம இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் இணைத்து ‘திராவிடர் கழகம்’ என்று பெயரிட்டார் தந்தை பெரியார்.

இந்த நிகழ்வையடுத்து 25 ஆண்டு களுக்குப் பின் 1969இல் சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றினார் அண்ணா. இந்த இருபெரும் திராவிடத் தலைவர்களின், நகர்வுகள் தொலை நோக்கு சிந்தனைகள் எதிரி களை தூங்கவிடாது மிரட்டிக்கொண்டு வருகின்றன என்பது ராஜ்பவனத்து உளறல்களாக வெளிப்படுகின்றன. தமிழ், தமிழ்நாடு, திராவிடம் இவை தமிழர்களின் அடிப்படைச் சின்னங்கள்  விழுமியங்கள். வாழ்வியல் ஆதாரங்கள், கலாச்சாரப் பண்பாட்டு உச்சங்கள்!இவை இன எதிரி களை அச்சுறுத்தும் கரணியங்கள்!

உளறல்கள் தொடரட்டுமே.

- பேரா. முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்


No comments:

Post a Comment