தென் மாவட்ட ரயில் போக்குவரத்து மாற்றமா? பயணிகள் கடும் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

தென் மாவட்ட ரயில் போக்குவரத்து மாற்றமா? பயணிகள் கடும் எதிர்ப்பு

சென்னை, ஜன.8  மதுரை மதுரை ரயில்வே கோட்டத் தில், தண்டவாள இணைப்பு பணிக்காக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை கோட்ட ரயில் வேக்கு உள்பட்ட தூத்துக் குடி, நெல்லை-மதுரை இடையே இரட்டை அகலப் பாதை பணிகள் முடிந்துள் ளது. இதில் திருமங்கலம்-மதுரை இடையேயான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே, கோவில்பட்டி-கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை அகலப் பாதையை இணைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, ராமேசுவரம்-கன்னியா குமரி வாரம் மும்முறை விரைவு ரயில் (வ.எண். 2262122622) நாளை (திங் கட்கிழமை), கன்னியாகுமரி-ராமேசுவரம் விரைவு ரயில் 10-ஆம் தேதி, திருச்சி-திரு வனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண். 22627/22628) 11-ஆம் தேதி யும் இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளன.

பாலக்காடு_-திருச்செந் தூர் விரைவு ரயில்(வ.எண். 16731/16732) இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை, 11-ஆம் தேதிகளில் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். வருகிற 10-ஆம் தேதி மதுரை வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு _ -நெல்லை விரைவு ரயில் (வ.எண்.16845) இன்று, நாளை, 10-ஆம் தேதிகளிலும், நெல்லை-_ஈரோடு விரைவு ரயில் (வ.எண்.16846) நாளை, 10,11-ஆம் தேதிகளிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரம்-நாகர்கோவில் அந்தி யோதயா விரைவு ரயில் (வ.எண்.20691) இன்று, நாளை, 10-ந் தேதிகளிலும், நாகர்கோவில்-_தாம்பரம் அந்தியோதயா ரயில் (வ.எண்.20692) நாளை, 10,11-ந் தேதிகளிலும் திருச்சி-_நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. தென் மாவட்ட ரயில்கள் ரத்து கோவை_-நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (வ.எண்.16322/16321) நாளை, 10,11-ஆம் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு-_நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படு கிறது. புனலூர்-மதுரை விரைவு ரயில் (வ.எண்.16730) நாளை, 10-ஆம் தேதிகளிலும், மதுரை-புனலூர் விரைவு ரயில் (வ.எண்.16731) 10,11-ஆம் தேதிகளில் நெல்லை-மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை-திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (வ.எண்.16105) நாளை 10-ஆம் தேதிகளிலும், திருச்செந் தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16106) 10,11-ஆம் தேதிகளிலும் திருச்சி-_திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மைசூரு-_தூத்துக்குடி விரைவு ரயில் (வ.எண்.16236) 10-ஆம் தேதியும், தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (வ.எண்.16236) 11-ஆம் தேதி யும் விருதுநகர்-தூத்துக்குடி இடையே ரத்து செய்யப் படுகிறது. மாற்றுப்பாதை சென்னை-குருவாயூர் விரைவு ரயில் (வ.எண்.16127.16128) 10-ந் தேதி இருமார்க்கங்களி லும் நெல்லை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். பெங்களூரு_-நாகர்கோவில் விரைவு ரயில் (வ.எண்.17235) 10-ஆம் தேதி விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்றுப் பாதையில் நெல்லை சென்று அங்கிருந்து நாகர்கோவில் செல்லும். இதுதவிர, திரு வனந்தபுரம்-_திருச்சி இன்டர் சிட்டி விரைவு ரயில், சென்னை-_நெல்லை விரைவு ரயில், சென்னை-_தூத்துக் குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியன வருகிற 10-ஆம் தேதி காலதாமதமாக இயக்கப்படும்.


No comments:

Post a Comment