திராவிட மாடல் ஆட்சியின் நேர்மையை பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

திராவிட மாடல் ஆட்சியின் நேர்மையை பாரீர்!

நடைபாதை  வியாபாரிகளிடம் மாமுல் கேட்ட கிளி மூக்கு கவுன்சிலரின் கணவர் கைது

சென்னை,ஜன.1- சென்னை வண்ணை நகர் எம்.சி. ரோடு மற்றும் ஜி.ஏ. சாலை பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. மொத்தம் மற்றும் சிறு வியாபாரம் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட நடைபாதை மற்றும் சாலையோர கடைகளும் உள்ளன. 

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 51ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிரஞ்சனா என்பவ ருடைய கணவரான ஜெகதீசன் (வயது 32) என்பவர் நடைபாதை கடை வியாபாரி களிடம் ஆட்களை அனுப்பி ஒரு நாளுக்கு ரூ.200 வீதம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், மாமூல் கொடுக்கத் தவறினால் சம்பந்தப் பட்டவரிடம் தொலைபேசிமூலம் மிரட்டு வது என பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதை கண்டித்து சாலையோர வியா பாரிகள், வண்ணை நகர், சிமெண்டரி சாலையில் அண்ணா நீரேற்று நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். வண்ணை நகர்  காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர். 

சாலையோர வியாபாரிகளின் இந்த சாலை மறியல் போராட்டம் தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. மேலும் இதுபற்றி சாலையோர வியாபாரிகள் கொடுத்த புகாரின்பேரில் வண்ணை நகர் காவல்துறை ஆய்வாளர்தவமணி, ஜெகதீசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில்  30.12.2022 அன்று இரவு வண்ணை நகர் ஜே.பி. கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஜெக தீசனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். 

நீதிபதி உத்தரவின் பேரில் அவரை புழல் சிறையில் அடைத்தனர். கைதான ஜெகதீசன், தனது மனைவி நிரஞ்சனா கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றபோது சாலையில் நின்று நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வண்ணை நகர்ரோந்து காவல்துறையினரிடம் ஜெகதீசன், தான் கவுன்சிலர் எனக்கூறி காவல்துறையினரை மிரட்டியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஏற்கெனவே அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment