காந்தியார் கொலையும் பகவத் கீதையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

காந்தியார் கொலையும் பகவத் கீதையும்

இந்திய சுதந்திரத்திற்குப் பவள விழா - எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவு கொண்டாடுகின்ற வேளையில், “இந்தாட்டின் தந்தை” (Father of the Nation) என்று அழைக்கப்பட்ட காத்தியார் இந்து மதவெறிக்கு எப்படிப் பலியானார்? ஏன் பலியானார்? என்பதை வேதனையுடன் நினைவுபடுத்திக் கொள்ள நாம் கடமைப் பட்டுள்ளோம்.

125 ஆண்டுகள் வாழவேண்டும் என்று விரும்பியவர் காந்தியார். அப்படிப்பட்டவரை, மதவெறி பலிகொண்டது எப்படி? எதன் தாக்கத்தி னால் என்பதை உணர்ந்தால், எவ்வளவு கேடான தீயவிளைவு பகவத் கீதையால் உருவாகியுள்ளது என்பது எவருக்கும் எளிதில் விளங்கும்.

‘The Murder of the Mahatma’ ‘மகாத்மாவின் கொலை’ என்று தலைப் பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி ஜி.டி.கோஸ்லா அவர்கள் 1963இல் ஒரு நூல் எழுதினார். அதில் அவர், காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் நாயக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனர். அவருடைய சகோதரர் கோபால் கோட்சே. அவருக்கு மிகவும் உறுதுணையாக இந்தக் கொலையில் ஒத்துழைத்த நாராயண் ஆதோத்ரேயா இவர்கள் எல்லாம் ஹிந்துமத தர்மத்தின்படிதான் இக் கொலையைத் தாங்கள் செய்யத் துணிந்ததாகவும் பகவத் கீதையின் தாக்கத்தால்தான் அது என்றும் தெளிவாக நீதி மன்றத்திலே அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நூலில் இதை விளக்கமாக எழுதியுள்ளார் நீதிபதி கோஸ்லா அவர்கள்.

“Godse had made a study of Bhagawad gita and knew most of its verses by heart. He liked to quote them to justify acts of violence in pursuing a righteous aim.” (The Murder of The Mahatma P. 274)

“கோட்சே பகவத் கீதையைப் படித்திருந்தார்; அதன் பெரும்பாலான சுலோகங்களை மனப்பாடமாக அறிந்திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச் செய்யப்படுகின்ற வன்செயல்களை நியாயப்படுத்துவதற்கு அவற்றை மேற்கோளாகக் காட்டுவதில் அவர் விருப்பம் கொண்டிருந்தார்.” (“மகாத்மாவின் கொலை’ பக். 274)

No comments:

Post a Comment