வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் மறைவு


பட்டுக்கோட்டை ஒன்றிய கழக அமைப்பாளர் வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் நேற்று (28.01.2023) இரவு 10:00 மணியளவில் சாலை விபத்தில் உயிரிழந்தார். வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் கடந்த 26 ஆண்டு களாக திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கொள்கை மாறாமல் கருப்புச் சட்டைக்கு சொந் தக்காரராக இருந்தவர்.  ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராக முதன் முதலில் பொறுப்பேற்று பல பொறுப் புகளில் இருந்து இறுதியாக ஒன்றிய அமைப்பாளராக தன்னைக் கழகதிற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவரது பெற்றோர் அந்தோணி முத்து-ஆரோக்கிய மேரி. இவரது மனைவி அந்தோணியம்மாள். இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கழகத்தில் எப்பொழுது இணைந்தாரோ அன்று முதல் இறக்கும் போது வரை கருப்புச் சட்டைக்கு சொந்தக்காரர் ஆவார்.

திராவிடர் கழக தெருமுனைப் பிரச்சாரம் முதல் மாநாடு வரை கழகத் தோழர்களை பெருமளவில் அழைத்து வரக் கூடியவர். இவருடைய இழப்பு பட்டுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களுக்கு பேரிழப்பாகும். இன்று (29.1.2023) மதியம் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு - வீரக்குறிச்சி இடுகாட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நிறைவேறின.



No comments:

Post a Comment