ஆண்டிமடத்தில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் பா. விக்னேஷ்-பிலிப்பைன்ஸ் அ.வெல் ஜாலின் இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

ஆண்டிமடத்தில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் பா. விக்னேஷ்-பிலிப்பைன்ஸ் அ.வெல் ஜாலின் இணையேற்பு விழா

அமைச்சர் சா.சி.சிவசங்கர் வாழ்த்து

ஆண்டிமடம், ஜன.13 ஆண்டிமடம் ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண்டியன்-தலைமை யாசிரியர் க.சாந்தி ஆகியோரது மகன் பொறியாளர் பா.விக்னேஷ் - பிலிப்பைன்ஸ் நாடு மிந்தானாவு தீவுஅர்மாண்டோ மெரிலின் ஆகியோரது மகள் வெல்ஜாலின் ஆகியோரது வாழ்க்கை இணை யேற்பு விழா அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கவரப்பாளையம் பெரியார் அண்ணா அரங்கில் 7.1.2023 சனிக்கிழமை மாலை 5 .30மணி யளவில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

மணமகனின் சகோதரர் கூட்டுறவுத்துறை சார் பதிவாளர்  பா .விவேக் வரவேற்புரையாற்றினார்.

மண்டல தலைவர் பொறியாளர் கோவிந்த ராஜன், மண்டல செயலாளர் சு. மணிவண்ணன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ரெங்க. முருகன், இரா. கலியபெருமாள், ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் க. கார்த்திக், மாவட்ட செயலாளர் க. சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே. சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச் சருமான எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் ஜாதி, மதம், இனம், நாடு, மொழி கடந்த இந்த சுயமரி யாதைத் திருமணம் சிறப்பானது. கொள்கை பிடிப்புள்ள குடும்பத்தையும் மணமக்களையும் பாராட்டுவதாகக் கூறி வாழ்த்துரை வழங்கினார்கள். 

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சுயமரியாதை திருமணத்தின் சிறப்பு களை எடுத்துக் கூறி மணமக்களுக்கு இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார் மணமக்கள் இருவரும் மாலைமாற்றி இருவரும் மணவிழா அடையாள மாக ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தனர். சிறப்பாக மணவிழா நிறைவுற்றது. மணமக்கள் நன்றி கூறினர். 

மணவிழாவை ஒட்டி வண்ண சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும் பதாகைகள் கட்டப்பட்டும், ஏராள மான கழகக் கொடிகள் கட்டப்பட்டும் சிறப்பாக இருந்தது.

 பங்கேற்றோர்

என்.ஆர். அய்.ஏ.எஸ் அகாடமியின் சேர்மன் என்.ஆர். விஜயாலயன், கழக மாவட்டப் பொறுப்பாளர்கள்: மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந்திரன் மாவட்ட துணைத் தலைவர்,இரா திலீபன் மாவட்ட துணை செய லாளர் மா. சங்கர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் தங்க.சிவமூர்த்தி, ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.அறிவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் 

மு.ராஜா,  ஒன்றிய பொறுப்பாளர்கள் அரியலூர் மு.கோபாலகிருட்டிணன், திருமானூர் பெ.கோபி நாதன், சு.சேகர், ஜெயங்கொண்டம்மா. கருணாநிதி, துரை. பிரபாகரன், தா.பழூர் பி.வெங்கடாசலம், சிந்தாமணி இராமச்சந்தின், சி.தமிழ்சேகரன், மீன்சுருட்டி தொழிலதிபர் ராஜா.அசோகன், ஆண்டிமடம் ஒன்றிய பொறுப்பாளர்கள் இரா.எ.இராமகிருட்டிணன், த.கு.பன்னீர்செல்வம், நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை, சிலம்பூர் இராமச்சந்திரன், வல்லம் வே.செந்தில், செந்துறை நீ. பெரியார் செல்வன். பாலா, மீன்சுருட்டி சேக்கிழார், திருக்களப்பூர் பிச்சமுத்து, ஆண்டிமடம் சுந்தரமூர்த்தி, தர்மேந்தர் வீராக்கன் ரமேஷ், சத்யராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பத்ம நாபன், டாக்டர் ஜோதி, தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் இரா.அ.சதீஷ், உள்ளிட்ட ஏராள மான கழகத் தோழர்களும், உறவினர்களும் நண்பர்களும் சிறப்பாக பங்கேற்றனர்.


No comments:

Post a Comment