இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது

சென்னை, ஜன. 2- சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 6 நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த பட்டினிப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள டி.பி.அய். வளாகத்தில் கடந்த 27-ஆம் தேதி முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6ஆவது நாளாக நேற்றும் (1.1.2023) அவர்கள் போராட்டத்தை முன்னெடுத் தனர். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோ ருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 

இடைநிலை ஆசிரியர்களின் பட்டினிப் போராட்டத்தில் ஏராளமா னோர் பங்கேற்றனர். 5ஆவது நாளான நேற்று முன்தினம் (31.12.2022) 170-க்கும் மேற்பட்டோர் மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட் டனர். 

சிலர் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் போராட்டக்களத்துக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

முதலமைச்சர் அறிவிப்பு

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர் களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டார். முதல்-அமைச் சரே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பட்டினிப் போராட்டத்தை கைவிடு வது  என போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி பட்டினிப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்க மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மட்டுமே குழு அமைக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் முதன் முறையாக இடைநிலை ஆசிரியர்களுக்காக குழு அமைக்கப் படும் என முதல்-அமைச்சர் தாயுள்ளத் துடன் அறிவித்துள்ளார். இதற்காக மகிழ்ச்சி கொள்வதுடன், நிச்சயம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கிறது. முதல்-அமைச்சரின் வார்த் தையை நம்பி எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் 20 ஆயிரம் ஆசிரியர் குடும்பங்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை மூலம் 6 நாள்களாக நடந்து வந்த பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து போராட் டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் கடந்த 6 நாள்களாக போராட்ட மய்யமாக மாறியிருந்த டி.பி.அய். வளாகம் நேற்று மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.

No comments:

Post a Comment