பாராட்டத்தக்க நியமனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

பாராட்டத்தக்க நியமனம்!

தெற்கு சூடானில் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் பணியாற்றிய சத்தியபிரியா

திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராகிறார்  

திருச்சி, ஜன. 4-  பல்வேறு இனக்குழுக்கள் எந்நேரமும் துப்பாக்கிகளோடு வந்து மோதிக்கொள்ளும் தெற்கு சூடானில் காவல் பணிக் குழுவில் பணியாற்றிய சத்திய பிரபா திருச்சி மாவட்ட முதல் காவல் ஆணையராக பொறுப் பேற்கிறார். 

திருச்சி மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப் பட்டு, 25 ஆண்டுகள் ஆகி யுள்ள நிலையில், மாநகரின் முதல் பெண் காவல் ஆணைய ராக எம்.சத்தியபிரியா பொறுப்பேற்க உள்ளார். 

தற்போதைய ஆணையர் கார்த்திகேயன் மத்திய மண் டல அய்.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக காஞ்சி புரத்தில் காவல்துறை துணைத் தலைவர் பணி யாற்றிய எம்.சத்தியபிரியா காவல் துறைத் தலைவராக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் திருச்சி மாநகர காவல்துறை உருவாக் கப்பட்டு, செயல்பாட்டிலுள்ள கடந்த 25 ஆண்டுகளில் 32 ஆவது ஆணையராக பொறுப்பேற்கும் சத்திய பிரியா மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

தெற்கு சூடானில் அய்.நா பணி:

1997ஆம் ஆண்டு காவல் துறையில் வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பணிக்குச் சேர்ந்த இவர், 2006ஆம் ஆண்டு காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சேலம் மற்றும் திருச்சி மாநகரங்களில் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட இடங்களில்  பணிபுரிந்தார். அதன்பின் காவல்துறைத் துணைத் தலைவர் பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சிப் பள்ளி, காஞ்சிபுரம் சரகங்களில் பணிபுரிந் துள்ளார்.

இவர், ஏற்கெனவே கடந்த 2012 ஜூலை முதல் 2013 பிப்ரவரி வரை திருச்சி மாநகர காவல் துறையில் துணை ஆணையராக பணியாற்றியபோது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், தெற்கு சூடான் நாட்டுக்குச் சென்று, அய்.நா பணிக் குழுவில் சேர்ந்து காவல் ஆலோசகராக ஓராண்டு பணியாற்றினார். அதன் பிறகு மீண்டும் தமிழ் நாடு காவல்துறை பணியில் இணைத்துக் கொள்ளப் பட்டார். இவரது மெச்சத்தக்க பணியைப் பாராட்டி 2020ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

காவல் ஆணையராக பதவி வகித்துள்ள எம்.சத்தியபிரியா  நாளிதழ் ஒன்றுக்கு கூறிய தாவது:

"முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி மாநகர காவல் துறையின் முதல் பெண் காவல் ஆணையராக பொறுப்பேற் பதில் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன். 

கடந்த 10 ஆண்டுக ளுக்கு முன் இங்கு துணை ஆ¬ ணயராக பணியாற்றி யுள்ள தால், திருச்சி மாநகரம் எனக்கு நன்கு அறிமுகமான இடம் தான். இங்கு ரவுடிகளின் செயல்பாடுகளை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கும், கஞ்சா விற்பனையைத் தடுக்கவும் முன்னுரிமை அளித்து செயல் படுவேன்" என்றார். 

No comments:

Post a Comment